- அல்ட்ரோஸ் ஐசிஎன்ஜி ஆறு வகைகளில் கிடைக்கிறது
- சன்ரூஃப் வசதியுடன் வந்த முதல் சிஎன்ஜி கார்
டாடா அல்ட்ரோஸ் ஐ-சிஎன்ஜி விலைகள் மற்றும் முன்பதிவுகள்
டாடா மோட்டார்ஸ் தனது அல்ட்ரோஸ் ஐ-சிஎன்ஜியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை இந்தியாவில் ரூ. 7.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ஆறு வேரியண்ட்ஸில் கிடைக்கும் புதிய எடிஷனின் முன்பதிவு கடந்த மாதம் ரூ. 21,000 யிலிருந்து தொடங்கபட்டன.
அல்ட்ரோஸ் சிஎன்ஜி நிறங்கள் மற்றும் வேரியண்ட்ஸ்
புதிய அல்ட்ரோஸ் ஐ-சிஎன்ஜி ஆனது XE, XM+, XM+(S), XZ, XZ+(S), XZ+O(S) ஆகிய ஆறு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. அவென்யூ ஒயிட், ஆர்கேட் க்ரே, டவுன்டவுன் ரெட் மற்றும் ஓபெரா ப்ளூ போன்ற நான்கு மோனோடோன் வண்ணங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம், டூயல் -டோன் விருப்பங்களில் பிளாக் சன்ரூஃப் உடன் அவென்யூ ஒயிட், பிளாக் சன்ரூஃப் உடன் டவுன்டவுன் ரெட் மற்றும் பிளாக் சன்ரூஃப் உடன் ஓபெரா ப்ளூ ஆகியவை அடங்கும்.
டாடா அல்ட்ரோஸ் ஐ-சிஎன்ஜி இன்ஜின், டிரான்ஸ்மிஷன் மற்றும் விவரக்குறிப்புகள்
டாடா அல்ட்ரோஸ் சிஎன்ஜி பதிப்பில் 1.2-லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் சிஎன்ஜி மோடில், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும். பெட்ரோல் மோடில் 87bhp மற்றும் 115Nm டோர்க், மற்றும் சிஎன்ஜி மோடில் 72bhp மற்றும் 103Nm டோர்க்கையும் வெளியிடும்.
டாடா அல்ட்ரோஸ் சிஎன்ஜி ஃபீச்சர்ஸ்
டாடா அல்ட்ரோஸ் ஐ-சிஎன்ஜி ஆனது க்ரூஸ் கன்ட்ரோல், ஐஆர்ஏ கனெக்டெட் கார் டெக்னாலஜி, ஆறு ஏர்பேக்ஸ், பின்புற ஏசி வென்ட்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சன்ரூஃப் அம்சம் கொடுக்கப்பட்ட முதல் சிஎன்ஜி கார் இது தான்.
மற்ற முக்கிய அம்சங்களில் சிங்கிள் அட்வான்ஸ் இசியு, ஆட்டோ சுவிட்ச் மிட்- ஃபியூல், ட்வின்-சிலிண்டர் டெக்னாலஜி, சிஎன்ஜி டைரக்ட் ஸ்டார்ட் மற்றும் ஃப்யூல் நிரப்பும் நேரத்தில் காரை நிறுத்த மைக்ரோ சுவிட்ச் ஆகியவை அடங்கும்.
வேரியண்ட்ஸின் விலை
XE | ரூ 7.55 லட்சம் |
XM+ | ரூ 8.40 லட்சம் |
XM+(S) | ரூ 8.85 லட்சம் |
XZ | ரூ 9.53 லட்சம் |
XZ+(S) | ரூ 10.03 லட்சம் |
XZ+O(S) | ரூ 10.55 லட்சம் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்