புதிய ஆண்டு முதல் பாதியில் எஸ்யுவிஸ், செடான்ஸ், ஹேட்ச்பேக்ஸ் அல்லது லக்சுரி மாடல்ஸ் என பலவிதமான வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளது. அடுத்த சில நாட்களில் மழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் வெளியிடப்படும் வரவிருக்கும் எஸ்யுவிஸைப் பற்றி பார்ப்போம்.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் - ஜூலை 2023
செல்டோஸ் க்கான எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் அடுத்த மாதம் ஃபேஸ்லிஃப்ட் வடிவத்தில் வரும். இந்த மிட்-சைஸ் எஸ்யுவியின் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்ஸில் தொடங்கியுள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பிப்புகளைப் பொறுத்தவரை, செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாற்றியமைக்கப்பட்ட எக்ஸ்டீரியர்வடிவமைப்பு, பனோரமிக் சன்ரூஃப், டாஷ்போர்டில் ட்வின்-டிஸ்ப்ளே செட்அப், டூயல்-ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், 360-டிகிரி கேமரா, ஒரு பவர்ட் டெயில்கேட் மற்றும் எலக்ட்ரோனிக் பார்க்கிங் ப்ரேக் ஆகியவற்றாக இருக்கலாம். மேலும் ஒரு ஏடாஸ் ஃபீச்சர்ஸை பெறலாம். 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மில் ஆகியவற்றை உள்ளடக்கிய வெர்ஷனின் அதே இன்ஜின் விருப்பங்களுடன் இந்த மாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா எலிவேட் - ஜூலை 2023
ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாராவுக்கு போட்டியாக எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியை ஹோண்டா கார்ஸ் இந்தியா, இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது. இந்த மாடல் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இதன் முன்பதிவு தற்போது ஒரு சில டீலர்ஸில் நடைபெற்று வருகிறது.
ஹோண்டா எலிவேட் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இதில் ஹைப்ரிட் வெர்ஷன் வழங்கப்படாது, ஆனால் ஹோண்டா 2026 க்குள் எலிவேட் அடிப்படையிலான இவியை அறிமுகப்படுத்தும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் - 10 ஜூலை
இந்த எக்ஸ்டர் பி-எஸ்யுவி ஆனது இந்திய மார்க்கெட்க்கான ஹூண்டாயின் அடுத்த மாடலாகும், இதன் வெளியீடு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும். டாடா பஞ்ச் மற்றும் சிட்ரோன் C3 போட்டியாளர்களுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன, மேலும் கார் தயாரிப்பாளர் சமீபத்தில் வரவிருக்கும் மாடலின் இன்டீரியர் மற்றும் அம்சங்களை வெளிப்படுத்தினார்.
எக்ஸ்டரில் 1.2-லிட்டர் கப்பா பெட்ரோல் மோட்டார், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்படும். டூயல் டேஷ்கேம் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற செக்மென்ட்-ஃபர்ஸ்ட் அம்சங்களைக் கொண்ட இந்த மாடல், அறிமுகத்திலேயே சிஎன்ஜி வெர்ஷனிலும் வழங்கப்படும்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ்- பண்டிகை வெளியீடு
சிட்ரோன் இந்த ஆண்டு ஏப்ரலில் இந்திய மார்க்கெட்க்கு C3 ஏர்கிராஸை வெளியிட்டது. C3 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்ட செவன்-சீட் எஸ்யுவியின் விலைகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பண்டிகைக் காலத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
C3 ஏர்கிராஸில் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழியாக இதன் வீல்ஸ்க்கு பவரை அனுப்பும். இந்த மோட்டார் 109bhp மற்றும் 190Nm டோர்க்கை வழங்கும்.
மஹிந்திரா பொலேரோ நியோ ப்ளஸ் ஃபேஸ்லிஃப்ட் - பண்டிகை வெளியீடு
மஹிந்திரா நிறுவனம் பொலேரோ நியோ ப்ளஸை டெஸ்ட் செய்து வருகிறது, இது அடிப்படையில் TUV300 ப்ளஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாகும். புதுப்பிக்கப்பட்ட மாடலின் வேரியண்ட் விவரங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளிவந்தது, முக்கிய விவரக்குறிப்புகளையும் வெளிப்படுத்துகின்றது.
பொலேரோ நியோ ப்ளஸின் 1.5-லிட்டர், டீசல் இன்ஜின் 100bhp மற்றும் 260Nm டோர்க்கை உற்பத்தி செய்யும். இந்த மோட்டார் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும்.
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் - டிசம்பர் 2023
செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டைத் தொடர்ந்து கியா சோனெட், அதன் ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தில் இருக்கும். முந்தையதைப் போல இல்லாமல், இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தற்போது விற்பனையில் உள்ள மாடலை விட இந்த மாடல் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் கூடுதல் ஃபீச்சர்ஸைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோனெட் ஃபேஸ்லிஃப்ட் அதே 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டார், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மில் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். கியா ஐஎம்டீ யூனிட் உட்பட அதன் பரவலான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைத் தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
டாடா பஞ்ச் சிஎன்ஜி - விரைவில் அறிவிக்கப்படும்
டாடா மோட்டார்ஸ் பஞ்ச்சின் சிஎன்ஜி வெர்ஷனை ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் அல்ட்ரோஸ் சிஎன்ஜி உடன் காட்சிப்படுத்தியது. இந்த அல்ட்ரோஸ் சிஎன்ஜி, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பஞ்ச் சிஎன்ஜியின் வெளியீட்டிற்கான அதிகாரப்பூர்வ லான்ச்சைஇன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த மாடலில் ட்வின்-சிலிண்டர் டெக்னாலஜி மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களைத் தவிர, வித்தியாசமான ட்யூனையும் இது பெறும். 1.2-லிட்டர் பெட்ரோல் மோட்டார் 84bhp மற்றும் 113Nm டோர்க்கை உற்பத்தி செய்யும், அதே சிஎன்ஜி பயன்முறையில் இநத 76bhp மற்றும் 97Nm டோர்க்கைஉற்பத்தி செய்யும்.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் -விரைவில் அறிவிக்கப்படும்
டாடா மோட்டார்ஸ் பல தயாரிப்பு புதுப்பிப்புகளில் வேலை செய்து வருகிறது, அவற்றில் ஒன்று நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் ஆகும். இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவிவெர்ஷன், எக்ஸ்டீரியர், இன்டீரியர்அல்லது அம்சப் பட்டியல் என ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பைப் பெறும். இந்த ஆப்டேடட் வெர்ஷனின் டெஸ்ட் ம்யூல் பல்வேறு இடங்களில் காணப்பட்டன, இதன் முக்கிய விவரங்களை வெளிப்படுத்துகின்றது.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5-லிட்டர் டீசல் மில்இன்ஜினை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதுப்பிப்புகள் இறுதியில் ப்ரைம் மற்றும் மேக்ஸ் வெர்ஷன்ஸில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் டைகுன் ட்ரைல் மற்றும் ஸ்போர்ட் எடிஷன்ஸ் -விரைவில் அறிவிக்கப்படும்
2023 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பின் போது, ஃபோக்ஸ்வேகன் வர்டஸ் மற்றும் டைகுன் வரிசையில் வரவிருக்கும் பல்வேறு வேரியண்ட்ஸை அறிவித்தது. கார் தயாரிப்பாளர் ஜிடீ லிமிடெட் கலெக்ஷன் சீரிஸை இந்த மாத தொடக்கத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தியது, மேலும் இவை வரும் மாதங்களில் டைகுன் ஸ்போர்ட் மற்றும் ட்ரைல் எடிஷன்ஸால் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைகுன் ஸ்போர்ட் மற்றும் ட்ரைல் எடிஷன்ஸ் அவற்றின் வழக்கங்களை வேறுபடுத்துவதற்கு ஒப்பனை சேர்க்கைகளைப் பெறும். இரண்டு வெர்ஷன்ஸும் 148bhp, 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், ட்ரைல் மற்றும் ஸ்போர்ட் எடிஷன்ஸ் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் செவன்-ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்