- டாடா நெக்ஸான் மற்றும் கியா சோனெட் ஆகிய மாடல்ஸுடன் போட்டியிடும்
- ஸ்கோடாவின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் காராகும்
ஸ்கோடா இந்தியா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய சந்தையில் புதிய சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் விலையை வெளிப்படுத்துவதற்கு முன்னதாக, கார் நவம்பர் 6, 2024 அன்று நாட்டில் வெளியிடப்படும் என்று வாகன உற்பத்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்கோடா கைலாக் 1.0 லிட்டர், த்ரீ சிலிண்டர், டீஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் இன்ஜின் 114bhp மற்றும் 178Nm டோர்க்குடன் மட்டுமே வழங்கப்படலாம். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் அடங்கும். இது மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV3XO, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், ரெனோ கைகர் மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
டிசைனில், கைலாக் நேர்த்தியான எல்இடி டிஆர்எல்கள், புதிய கிரில், ஸ்பிளிட் ஹெட்லேம்ப் செட்டப், ரூஃப்-ரெயில்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, ரேப்பரவுண்ட் எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் புதிய பம்பர்களின் செட் ஆகியவற்றைப் பெறும். இன்டீரியரில், இந்த மாடலில் எலக்ட்ரிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் கனெக்ட், வர்ச்சுவல் காக்பிட், லெதரெட் சீட்ஸ் மற்றும் மேலும் பல அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்