- இந்த ஆண்டின் தொடக்கத்தில் டாஷியா ஸ்பிரிங் இவி காட்சிப்படுத்தப்பட்டது
- ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 220 கிமீ வரை செல்லும்
ரெனோ இந்தியா நிறுவனம் புதிய க்விட் இவி’யை டெஸ்ட் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் வாகனம் முற்றிலும் மூடப்பட்ட நிலையில் காணப்படும் டாஷியா ஸ்பிரிங் இவி என்ற பெயருடன் இணையத்தில் காணப்படும் படங்களில் காணலாம். டாஷியா ஸ்பிரிங் இவி இந்த ஆண்டின் தொடக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் ஒரு முழு சார்ஜில் 220 கிமீ தூரம் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த இவி’யின் சிறப்பு அம்சங்களில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்ஸ், டிசி லோகோவின் பின்னால் சார்ஜிங் போர்ட், சிங்கிள் வைப்பர், காண்ட்ராஸ்ட் கலர்ட் ரூஃப், ஷார்க் ஃபின் ஆண்டெனா, இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர், ஒயிட் இன்சர்ட்ஸ் கொண்ட ரியர் பம்பர் மற்றும் ஸ்டீல் வீல்ஸ் உள்ளன.
இன்டீரியரில் ஒரு பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒரு புதிய ரவுண்ட் கியர் லெவர், த்ரீ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங், ஒரு புதிய சென்டர் கன்சோல், டாஷ்போர்டின் இருபுறமும் வட்டவடிவ ஏசி வென்ட்ஸ், காண்ட்ராஸ்ட் கலர் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் டூயல்-டோன் தீம் ஆகியவற்றைக் காணலாம்.
இதில் 26.8kWh பேட்டரி பேக் மற்றும் 45bhp பவரை உற்பத்தி செய்யும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 220 கிமீ வரை செல்லக்கூடிய டிரைவிங் ரேஞ்சை தரும். கூடுதலாக, டிசி சார்ஜரின் உதவியுடன் 20% முதல் 80% வரை சார்ஜ் செய்ய வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்