- புதிய ZS இவி 17 க்கு மேல் ஏடாஸ் ஃபங்ஷன்ஸை பெறுகிறது
- இதில் 360 டிகிரி கேமரா உள்ளது
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து, MG நிறுவனம் ZS இவியை புதிய சேஃப்டி ஃபீச்சர்ஸுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ZS இவி நாட்டில் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் வாகனம் மற்றும் இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சார்ஜிங் வசதியை மேம்படுத்த, நிறுவனம் ZS இவியில் ஆறு சார்ஜிங் விருப்பங்களை வழங்குகிறது, அவை பின்வருமாறு:
1. எந்த 15A சாக்கெட் மூலமாகவும் சார்ஜ் செய்யக்கூடிய போர்ட்டபிள் சார்ஜிங் கேபிள். இந்த கேபிள் ஒவ்வொரு ZS இவி உடன் வருகிறது.
2. ஏசி ஃபாஸ்ட் சார்ஜர், வீடு அல்லது ஆஃபிஸில் எம்ஜி டீலர்ஷிப்ஸால் இலவசமாக நிறுவப்பட்டது.
3. டிசி ஃபாஸ்ட் சார்ஜர், எம்ஜி டீலர்ஷிப்ஸில் 24x7 கிடைக்கும்.
4. ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் எம்ஜி டீலர்ஷிப்ஸில் 24x7 கிடைக்கும்
5. ரோடுசைட் மொபைல் அசிஸ்டன்ஸ் சார்ஜிங் வசதி, அவசர காலத்தில் 24x7 கிடைக்கும்
6. ரெசிடென்ஷியல் கம்யூனிட்டி சார்ஜர் ஃபெசிலிட்டி
எம்ஜி ZS இவியின் சேஃப்டி ஃபீச்சர்ஸ்
எம்ஜி ZS இவி இப்போது லெவல்-2 ஏடாஸ் ஃபங்ஷன்ஸுடன் வழங்கப்படுகிறது. இதில், ட்ராஃபிக் ஜாம் அசிஸ்ட், ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங், ஸ்பீட் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற ஃபங்ஷன்ஸ் உள்ளது. இது செக்மென்ட்-ஃபர்ஸ்ட் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் ஹில் டிஸ்செண்ட் கண்ட்ரோலுடன் கூடிய 360 டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்ஸ், எலக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் டீபீஎம்எஸ் போன்ற சேஃப்டி ஃபீச்சர்ஸையும் பெறுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்