- பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்டில் கிடைக்கும்
- C43 AMG உடன் லான்ச் செய்யப்பட்டது
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா ஜிஎல்இ எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை இந்தியாவில் மூன்று வேரியண்ட்ஸுடன் ரூ. 96.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஸ்யுவி ஆனது C43 AMG உடன் அறிமுகமானது, இதுவே 2023 ஆம் ஆண்டில் மெர்சிடிஸ்-பென்ஸின் கடைசி அறிமுகமாகும். முன்பதிவுகள் இன்று முதல் திறக்கப்படும் மற்றும் டெலிவரி நவம்பர் 2023 இறுதியில் தொடங்கும்.
எக்ஸ்டீரியர், புதிய ஜிஎல்இ ஆனது ஸ்லீக் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், சிங்கிள் ஸ்லாட் கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அலோய் வீல்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்ஸுடன் மறுவேலை செய்யப்பட்ட பின்புற பம்பர் ஆகியவற்றுடன் திருத்தப்பட்ட ஃப்ரண்ட் ஃபேஸை பெறுகிறது. மேலும், இதில் ரூஃப் ரெயில்ஸ், சைட் ஸ்டெப்ஸ் மற்றும் பிளாக்-அவுட் ஓஆர்விஎம்ஸை பெறுகிறது.
இன்டீரியரில், ஜிஎல்இ ஃபேஸ்லிஃப்ட்டின் கேபின் மற்றும் ஸ்டீயரிங் வீல் S-கிளாஸ்ஸை போலவே இருக்கும், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன் கூடிய லேட்டஸ்ட் எம்பியுஎக்ஸ் சிஸ்டம், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏர்கான் வென்ட்ஸ், ஃபோர்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற புதுப்பிப்புகளைப் பெறுகிறது. வயர்லெஸ் சார்ஜர், எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் ஃப்ரண்ட் மற்றும் ரியர் சீட்ஸ், மசாஜ் ஃபங்ஷன் கொண்ட வென்டிலேடெட் மற்றும் பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, டிரான்ஸ்பரண்ட் போன்னெட் ஃபங்ஷன், எலக்ட்ரிக் சன் பிளைண்ட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், வாடிக்கையாளர்கள் ஆஃப்-ரோடு பேக்கேஜுடன் மூன்று வெவ்வேறு அப்ஹோல்ஸ்டரி விருப்பங்களுடன் தேர்வு செய்யலாம்.
புதிய மெர்சிடிஸ் ஜிஎல்இ மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் வருகிறது - 2.0 லிட்டர் டீசல், 3.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார். ஃபோர் சிலிண்டர் பெட்ரோல் 265bhp/550Nm மற்றும் சிக்ஸ் சிலிண்டர் இன்ஜின் 362bhp/750Nm மற்றும் 375bhp/500Nm ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. அனைத்து இன்ஜின்ஸும் 4MATIC AWD டெக்னாலஜி உடன் எய்ட் ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்-ஷோரூம் விலை
வேரியண்ட்ஸ் | விலை |
மெர்சிடிஸ்-பென்ஸ் 300d 4MATIC | ரூ. 96.4 லட்சம் |
மெர்சிடிஸ்-பென்ஸ் 400d 4MATIC | ரூ 1.1 கோடி |
மெர்சிடிஸ்-பென்ஸ் 450 4MATIC | ரூ. 1.15 கோடி |