- பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் போன்ற கார்களுடன் போட்டியிடும்
- இந்தியாவிர்க்கு மட்டுமே இந்த LWB RHD வெர்ஷன் வழங்கப்படும்
மெர்சிடிஸ்-பென்ஸ் அதிகாரப்பூர்வமாக இந்தியாவிற்கான புதிய ஜெனரேஷன் இ-கிளாஸ் ஐ அறிமுகம் செய்துள்ளது, இதன் விலை ரூ. 78.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). LWB வடிவத்திலும் RHD வடிவத்திலும் சிக்ஸ்த் ஜெனரேஷன் காரைப் பெறும் ஒரே மார்க்கெட் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இது மூன்று வேரியன்ட்ஸில் இரண்டு பெட்ரோல் வெர்ஷனில் மற்றும் ஒரு டீசல் வெர்ஷனில் வழங்கப்படும்.
இன்ஜினைப் பொறுத்தவரை, புதிய இ-கிளாஸ் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களால் 48V மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. நைன்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் கிடைக்கிறது. புதிய இ-கிளாஸ் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் ஆடி A6 போன்ற கார்களுடன் போட்டியிடும்.
எக்ஸ்டீரியரில், 2024 இ-கிளாஸ் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டல்ஸ், த்ரீ-பாயிண்ட் கொண்ட ஸ்டார் வடிவமைப்புடன் புதிய கூடிய கிரில், 3D ஸ்டார் வடிவமைப்பு எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் 18-இன்ச் ஃபைவ்-ஸ்போக் அலோய் வீல்கள் ஆகியவற்றைப் பெறுகிறது. இதை ஹைடெக் சில்வர், கிராஃபைட் கிரே, போலார் ஒயிட், அப்சிடியன் பிளாக் மற்றும் நாட்டிக் ப்ளூ என ஐந்து வண்ணங்களில் தேர்வு செய்யலாம்.
புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸின் இன்டீரியர் மிகவும் பிரிமியமாக உள்ளது. இதில் 14.4-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட், ஃபுல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, சமீபத்திய எம்பக்ஸ் சிஸ்டம், ஃபோர் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் வென்ட் கன்ட்ரோல் மற்றும் ரியர் சீட் ரிக்லைன் ஃபங்ஷன் ஆகியவை சில சிறப்பம்சங்கள் ஆகும். மேலும், இதில் 64-வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், இரண்டாவது வரிசைக்கு எலக்ட்ரிக் பிளைண்ட்கள், பனோரமிக் சன்ரூஃப், அனைத்து கதவுகளுக்கும் பவர் மூடும் ஃபங்ஷன் மற்றும் பர்மெஸ்டர் மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறுகிறது. கார் தயாரிப்பாளரின் சிக்னேச்சர் ஹைப்பர்ஸ்கிரீன் டாஷ்போர்டில் காணலாம்.
புதிய இ-கிளாஸின் வேரியன்ட்ஸ் வாரியான விலைகள் பின்வருபவை (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்).
புதிய இ-கிளாஸ் E200: ரூ. 78.5 லட்சம்
புதிய இ-கிளாஸ் E220d: ரூ. 81.5 லட்சம்
புதிய இ-கிளாஸ் E450: ரூ. 92.5 லட்சம்