- E-கிளாஸின் ஆறாவது ஜெனரேஷன் என்பது தெரியவந்துள்ளது
- இது பெட்ரோல் மற்றும் டீசல் மைல்ட்-ஹைப்ரிட் இன்ஜின்களுடன் வரும்
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா சமீபத்தில் 2024 E-Class ஐ வெளியிட்டது, இப்போது நிறுவனம் அதன் வெளியீட்டு தேதியை அக்டோபர் 9 என உறுதி செய்துள்ளது. இந்த சொகுசு செடானின் டெலிவரியும் விரைவில் தொடங்கும்.
இது E-கிளாஸின் சிக்ஸ்த் ஜெனரேஷன் மாடலாகும், முந்தைய மாடலைப் போலவே இதுவும் LWB (லாங் வீல்பேஸ்) வடிவில் வரும், மேலும் இது ரைட் ஹேன்ட் டிரைவ் (RHD) சந்தைக்கு பிரத்தியேகமாக இருக்கும். இதன் மதிப்பிடப்பட்ட விலை சுமார் ரூ. 80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும். இது தவிர, இது E 200 மற்றும் E 220d உள்ளிட்ட இரண்டு வேரியன்ட்ஸில் கிடைக்கும்.
டிசைன் வாரியாக, புதிய E-கிளாஸில் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், S-கிளாஸ் போன்ற கிரில், ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்ஸ், டூயல்-டோன் வீல்ஸ், 3D ஸ்டார் டிசைனுடன் கூடிய எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் மேபேக்-சார்ந்த ரியர் குவார்ட்டர் கிலாஸ் ஆகியவை உள்ளன. இன்டீரியரில், ஃபோர்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், சாஃப்ட்-க்ளோஸ் டோர்ஸ், பின்பக்க பயணிகளுக்கான எலக்ட்ரிக் சன் ப்ளைண்ட்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங், இரு வரிசைகளிலும் வயர்லெஸ் சார்ஜர்கள், 360 டிகிரி கேமரா, லெவல் 2 ஏடாஸ் அம்சங்கள் மற்றும் ஆப்ஷனல் ஹைப்பர்ஸ்கிரீன் ஆகியவை கிடைக்கும்.
இன்ஜினைப் பற்றி பேசுகையில், E 200 2.0 லிட்டர் ஃபோர்-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும், இது 194bhp பவரையும் 320Nm டோர்க்கையும் உற்பத்தி செய்யும். அதேசமயம் E 220d ஆனது 2.0 லிட்டர் ஃபோர்-சிலிண்டர் டீசல் இன்ஜினைப் பெறும், இது 197bhp மற்றும் 400Nm டோர்க்கையும் உற்பத்தி செய்யும். இரண்டு வேரியன்ட்ஸிலும் நைன்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 48V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்