- மே 9 ஆம் தேதி லான்ச் செய்யப்படும்
- இது ஐந்து வேரியன்ட்ஸில் வழங்கப்படும்
மாருதி சுஸுகி ஃபோர்த் ஜெனரேஷன் ஸ்விஃப்ட் மாடலை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, அதன் வேரியன்ட்ஸ், வண்ணங்கள், மைலேஜ், இன்ஜின் விருப்பங்கள் மற்றும் பல அம்சங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுள்ளோம். இப்போது, இந்த கட்டுரையில் நாம் சொல்லப்போகும் புதிய ஸ்விஃப்ட்டின் VXi வேரியன்ட்டின் படங்கள் கிடைத்துள்ளன.
புதிய மாருதி ஸ்விஃப்ட் LXi, VXi, VXi (O), ZXi மற்றும் ZXi+ ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் வழங்கப்படும். இப்போது அதன் VXi வேரியன்ட்டிற்கு வரும் போது, இது அதன் இரண்டாவது பேஸ் ட்ரிம் ஆகும். இந்த வேரியன்ட்டில் எல்இடி டிஆர்எல்கள், பிளாக்-அவுட் கிரில், எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. கூடுதலாக, இது ஃபாக் லைட்ஸ், அலோய் வீல்ஸ், ரியர் வைப்பர், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனா போன்ற அம்சங்கள் இதில் கிடையாது.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், புதிய ஸ்விஃப்ட் ஒன்பது இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, ஆறு ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வென்ட்ஸ் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைப் பெறும்.
புதிய ஸ்விஃப்ட் 1.5 லிட்டர் Z சீரிஸ் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 80bhp பவரையும், 112Nm டோர்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், புதிய ஸ்விஃப்ட் ஏஆர்ஏஐ-சான்றளிக்கப்பட்ட மைலேஜில் இது ஒரு லிட்டருக்கு 25.72 கிமீ வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்