- அதன் நியூ ஜெனரேஷன் இந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது
- 35,000க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன
மாருதி சுஸுகி மே 2024 இல் புதிய ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்தியது, அதன் ஆரம்ப (எக்ஸ்-ஷோரூம்) விலை ரூ. 6.49 லட்சமாக இருந்தது. இந்த ஹேட்ச்பேக்கை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நிறுவனம் இப்போது ஆயிரக்கணக்கான ரூபாய்களை தள்ளுபடி செய்கிறது.
இந்த காரை நீங்கள் வாங்க விரும்பினால், ஜூலை மாதத்தில் இந்த நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டில் 17,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். இதில் ரூ. 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 2000 கார்ப்பரேட் தள்ளுபடியும் அடங்கும். இந்த தள்ளுபடி ஜூலை மாதம் வரை மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். மேலும், இந்த தள்ளுபடிகள் இடம், வேரியன்ட்ஸ், வண்ணங்கள் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடலாம்.
இந்த ஹேட்ச்பேக்கில் இந்த தள்ளுபடி வழங்கப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் காரணம் அதன் விலை. ஏனெனில் அதன் என்ட்ரி-லெவல் வேரியன்ட் மற்றும் பலேனோவின் என்ட்ரி-லெவல் வேரியன்ட்டின் விலைகளில் ரூ. 17,000 மட்டுமே வித்தியாசம் உள்ளது, அதே சமயம் டாப்-வேரியன்ட்டில் உள்ள வித்தியாசம் ரூ. 44,500 மட்டுமே.
இது தவிர, இந்த மாடலில் இன்னும் சிஎன்ஜி அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதும் மற்றொரு காரணமாக இருக்கலாம், இது சந்தையில் சிஎன்ஜி வாகனங்களுக்கு வலுவான தேவை இருப்பதால் வரும் சில மாதங்களில் அதையும் அறிமுகப்படுத்தப்படலாம்.
மொழிபெயர்த்தவர்- ஐசக் தீபன்