- புதிய Z12E 1.2 லிட்டர், த்ரீ-சிலிண்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்
- 2024 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவில் புதிய ஸ்விஃப்ட்டின் டெஸ்டிங்கை மாருதி சுஸுகி தொடங்கியுள்ளது! மூன்று ப்ரோடோடைப் மாடல்ஸை பொதுச் சாலைகளில் சோதனையிடப்பட்ட நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக்கின் புதிய விவரங்கள் இப்போது இணையத்தில் வெளிவந்துள்ளன.
புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் படங்களில் புதிய ஓஆர்விஎம் பிளிங்கர் உடன் ப்ளைன்ட் ஸ்பாட்மானிட்டர் பொருத்தப்பட்டிருந்தன. அதுவே இன்டர்நேஷனல் ஸ்பெக்கில் லெவல் 2 ஏடாஸ் டெக்னாலஜி உடன் கிடைக்கின்றன, இது இந்தியா மாடலுக்கு வாராது என்று நினைக்கிறோம்.
இது தவிர, ஸ்விஃப்ட் புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ், இன்டெக்ரேட்டட் டிஆர்எல்’ஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அலோய் வீல்ஸ் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்ஸ் ஆகியவற்றைப் பெறும். மேலும், பின்புற கதவின் வெளிப்புறக் ஹேண்டல்ஸும் சி-பில்லரில் இருந்து கதவுகளுக்கு மாற்றியமைக்கப்படும். இன்டீரியரில், கேபினில் பெரிய 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிளாக் மற்றும் ஒயிட் தீம் மற்றும் புதிய ஏசி கண்ட்ரோல் பேனல் ஆகியவற்றைப் பெறுகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜப்பானிய-ஸ்பெக் ஸ்விஃப்ட் புதிய Z12E 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இது CVT யூனிட் உடன் இணைக்கப்பட்ட ஏடபிள்யூடி அமைபுடன் வழங்கப்படும். பவர் வெளியீடு இன்னும் அறியப்படவில்லை என்றாலும், இந்த இன்ஜின் இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட்டிலும் அதை உருவாக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும், பவர் உற்பத்தி ஃப்ரண்ட் வீல்ஸுக்கு மட்டுமே வழங்கபடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்