- ஃபோர்த் ஜெனரேஷன் மாடல் யூரோ என்கேப் மூலம் சோதிக்கப்பட்டது
- நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் இந்தியாவில் மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது
புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், 2024 டாசியா டஸ்டர், புதிய ஸ்கோடா கோடியாக் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய புதிய கிராஷ் டெஸ்ட் முடிவுகளை யூரோ என்கேப் வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையில், யூரோ என்கேப் நடத்திய சமீபத்திய கிராஷ் டெஸ்ட்டில் ஃபோர்த் ஜெனரேஷன் ஸ்விஃப்ட் மாடலின் முடிவைத் தெரிந்து கொள்வோம்.
யூரோ என்கேப் அமைப்பின் படி, 2024 ஸ்விஃப்ட் மாடல் கிராஷ் டெஸ்ட்டில் 3-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. கிராஷ் டெஸ்ட்டில், ஸ்விஃப்ட் கார் அடல்ட் சேஃப்டியில் 67 சதவீதமும், சைல்ட் சேஃப்டியில் 65 சதவீதமும், சேஃப்டி அஸ்சிஸ்ட்டில் 62 சதவீதமும், சாலையில் பாதசாரிகள் மற்றும் மோட்டார் அல்லாத சைக்கிள் ஓட்டுபவர்கள் பிரிவில் 76 சதவீதமும் பெற்றுள்ளது.
இங்கு சோதனை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் 6 ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ப்ரீ-டென்ஷனர்ஸ் மற்றும் லோட் லிமிட்டர்ஸ் மற்றும் சீட் பெல்ட் ரிமைன்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் என்னவென்றால், இந்த காரின் இரண்டாவது வரிசையில் ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆங்கரேஜ் பாயிண்ட்ஸ் மற்றும் ஏடாஸ் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஃப்ரண்டல் ஆஃப்-செட் டெஸ்ட்டில் காரின் பயணிகள் பெட்டியின் முன்பகுதி நிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஜப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் காருக்கும் இந்தியாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் காருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், இஎஸ்பீ, எச்எஸ்ஏ, ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம், இசோஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆங்கரேஜ் பாயிண்ட்ஸ் மற்றும் சுஸுகி கனெக்ட் டெக்னாலஜி கொண்ட கூடிய கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இன்னும் சில மாதங்களில் நடத்தப்படும் பிஎன்கேப் டெஸ்டில் புதிய ஸ்விஃப்ட் கார் எந்த மாதிரியான ரிசல்ட்டை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்