- 11 நவம்பர் அன்று வெளியிடப்படும்
- இதில் செக்மெண்ட் ஃபர்ஸ்ட் எலக்ட்ரானிக் சன்ரூஃப் வழங்கப்படும்
நீண்ட காலமாக எதிர்பார்க்கபட்ட மாருதி சுஸுகியின் புதிய டிசையரின் லான்ச் தேதி வெளியானது. இது நவம்பர் 11 அன்று அறிமுகமாகும். இந்த ஃபோர்த் ஜெனரேஷன் சப்-ஃபோர் மீட்டர் செடான் ஹுண்டாய் ஆரா, டாடா டிகோர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுடன் போட்டியிடும்.
2024 டிசையரில் புதிய பம்பர்கள், ஹோரிசொன்டள் ஸ்லாட்ஸுடன் கூடிய புதிய கிரில், புதிய எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி ஃபாக் லைட்ஸ், டூயல் டோன் அலோய் வீல்ஸ் மற்றும் புதிய பாக்ஸி எல்இடி டெயில்லைட்ஸுடன் வழங்கப்படும்.
புதிய டிசையரின் இன்டீரியரில் டூயல்-டோன் தீம், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கிடைக்கும். கூடுதலாக, இது செக்மெண்ட்டின் முதல் எலக்ட்ரிக் சன்ரூஃப் பெறும் காராகும்.
புதிய டிசையரில் ஸ்விஃப்ட்டிலிருந்து எடுக்கப்பட்ட புதிய 1.2-லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும், இது 80bhp பவரையும் 112Nm டோர்க்கையும் உற்பத்தி செய்யும். இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைக் கொண்டிருக்கும். கூடுதலாக, இது ஒரு சிஎன்ஜி வெர்ஷனிலும் வரும், ஆனால் இது தொடங்கும் நேரத்திலா அல்லது அதற்குப் பிறகு வருகிறதா என்பது சரியாக தெரியவில்லை.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்