- தென் ஆஃப்ரிகாவில் வெளியிடப்படும்
- 60kWh பேட்டரி பேக் உடன் அறிமுகம் செய்யப்படலாம்
மஹிந்திரா தார் இவி கான்செப்ட் விரைவில் காட்சிப்படுத்தப்படும்
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஆகஸ்ட் 15, 2023 நாளை நடைபெறும் நிகழ்வில் எலக்ட்ரிஃபைட் தார் கான்செப்ட்டை மஹிந்திரா வெளியிட உள்ளது. பிராண்ட் கடந்த வாரம் வரவிருக்கும் மாடலின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டது, சில ஃபீச்சர்ஸ்ஸை வெளிப்படுத்தியது நாம் அதில் எதிர்பார்க்கக்கூடிய முக்கிய அம்சங்கள்.
தார்.இ கான்செப்ட்டின் எக்ஸ்டீரியர்
டீசரில் காணப்பட்டது போல், எலக்ட்ரிக் தார் கான்செப்ட் கிரில்லில் ‘தார்.இ’ பேட்ஜிங், ரவுண்டட் ஸ்கொயர் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ட்வீக் செய்யப்பட்ட எல்இடியுடன் செங்குத்தாக அடுக்கப்பட்ட தாரின் டெயில் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
தார்.இ இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விவரங்கள்
பிராண்டின் இங்க்ளோபிளாட்ஃபார்ம் அடிப்படையில், தார் இவி கான்செப்ட் 4WD செயல்பாட்டிற்காக இரண்டு அக்சல்க்கும் 60kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும். இந்த மாடல் ஐசிஇ தார் உடன் சில அம்சங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் அதன் இவி ரேஞ்சில் பிராண்டின் இரண்டாவது வாகனமாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்