- விலை ரூ. 12.99 லட்சம்
- RWD மற்றும் AWD வெர்ஷனில் கிடைக்கிறது
மஹிந்திரா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபைவ்-டூர் தார் ரோக்ஸை நேற்று நாட்டில் அறிமுகப்படுத்தியது. MX1, AX3, AX5 மற்றும் AXL உள்ளிட்ட வேரியன்ட்ஸில் தார் இந்த புதிய மறு செய்கையை ரூ. 12.99 லட்சம் அறிமுக எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இந்த கட்டுரையில், புதிய தார் ரோக்ஸுடன் வழங்கப்படும் அனைத்து எக்ஸ்டீரியர் வண்ணப்பூச்சு திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளோம்.
மஹிந்திரா தார் ரோக்ஸ் ஸ்டீல்த் பிளாக், டேங்கோ ரெட், எவரெஸ்ட் ஒயிட், டீப் ஃபாரஸ்ட், நெபுலா ப்ளூ, பேட்டில்ஷிப் கிரே மற்றும் பர்ன்ட் சியன்னா ஆகிய ஏழு எக்ஸ்டீரியர் வண்ணங்களில் கிடைக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், அனைத்து வெர்ஷன்களின் ஒரு பகுதியாக பிளாக் குவார்ட்டர் பேனலைப் பெறுகின்றன.
இயந்திர ரீதியாக, புதிய தார் ரோக்ஸ் 2.0-லிட்டர் டீஜிடிஐ டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் சிஆர்டிஐ டீசல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் RWD வெர்ஷன்க்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், டீசல் இன்ஜின் தார் ரோக்ஸின் RWD மற்றும் 4X4 இரண்டிலும் வழங்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பொறுத்தவரை, இரண்டு இன்ஜின்களும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்படும்.
இப்போது, ஆட்டோமேக்கர் டாப்-ஸ்பெக் 4X4 வெர்ஷனை தவிர பெரும்பாலான வேரியன்ட்ஸ்கான விலைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அக்டோபர் 3 முதல் மாடலை முன்பதிவு செய்ய முடியும், அதே நேரத்தில் தார் ரோக்ஸின் டெஸ்ட் டிரைவ் செப்டம்பர் 14 முதல் தொடங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்