- இந்த ஆண்டு டிசம்பரில் புதிய சோனெட் அறிமுகப்படுத்தப்படலாம்
- இது அப்டேட்ட டிசைன் மற்றும் புதிய அம்சங்களைப் பெறும்
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் எக்ஸ்டீரியர் டிசைன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக வெளியிடப்பட்டது, இது இந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஸ்பை ஷாட்ஸில் காணப்படுவது போல், 2024 கியா சோனெட் ஆனது ஃப்ரண்ட் பம்பரில் இன்டெக்ரேட்டட் டிஆர்எல்ஸுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பைக் கொண்டிருக்கும். அதன் கிரில்லில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, அதே நேரத்தில் ஏர் டேம் மற்றும் ஸ்கிட் பிளேட்டில் சில மாற்றங்கள் இருக்கும் என்று உங்களுக்குத் தெரிவிக்கிறோம். புதிய டூயல் டோன் அலோய் வீல்ஸும் இதில் வழங்கப்படும்.
ஃபேஸ்லிஃப்ட் கியா சோனெட் பின்புறத்தில் செல்டோஸ் போன்ற எல்இடி டெயில்லைட்ஸ், டெயில்கேட்டில் எல்இடி லைட் பார், பாக்ஸ் போன்ற பின்புற பம்பர் மற்றும் ஒரு புதிய இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர் ஆகியவற்றைப் பெறலாம். டூயல் டோன் ரூஃப் ரெயில்ஸ், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பை படங்களில் காணப்படும் மாடலில் முன்புறத்தில் ஏடாஸ் சென்சார் இல்லை, இது ஏடாஸ் அம்சங்களைக் கொண்டிருக்காது என்பதைக் குறிக்கிறது
புதிய சோனெட் ஆனது ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஏசி ஃபங்ஷன்க்கு டச்-அடிப்படையிலான கண்ட்ரோல், டான் மற்றும் பிளாக் இன்டீரியர் தீம் மற்றும் இரண்டாவது வரிசை பயணிகள் சீட்க்கான உள்ளமைக்கப்பட்ட சன் ப்ளைண்ட்ஸ் போன்ற புதிய அப்டேட்ஸை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய மாடலில் உள்ள அதே இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படலாம். இது 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் விருபங்களில் உள்ளன. இந்த அப்டேடட் மாடல் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவற்றுடன் போட்டியிடும், இவற்றின் விலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்