- செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மூன்று ட்ரிம்ஸ் மற்றும் எட்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்
- காஸ்மெட்டிக் அப்டேட், புதிய அம்சங்கள் மற்றும் புதிய இன்ஜின்ஸைப் பெறுகிறது
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் வெளியீடு, டைம்லைன் மற்றும் புக்கிங் விவரங்கள்
கியா இந்தியா இன்று இந்திய மார்க்கெட்டில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. கார் தயாரிப்பாளர் அப்டேடட் மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவுகளை 14 ஜூலை 2023 அன்று தொடங்கும், இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் வண்ண விருபங்கள்
புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ் லைன், ஜிடீ லைன் மற்றும் டெக் லைன் ஆகிய மூன்று ட்ரிம்ஸில் வழங்கப்படும். இதற்கிடையில், வாடிக்கையாளர்கள் பிரத்தியேகமான மேட் கிராஃபைட் வண்ண தீம் உட்பட எட்டு வண்ண விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் டிசைன் அப்டேட்ஸ்
டிசைனைப் பொறுத்தவரை, ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ் இப்போது இன்டெக்ரேட்டட் எல்இடி டிஆர்எல்’ஸ் கொண்ட புதிய கிரில், இருபுறமும் மாற்றியமைக்கப்பட்ட டிஆர்எல் டிசைன், புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், புதிய 18-இன்ச் கிரிஸ்டல்-கட் கிளோஸ்ஸி பிளாக் அலோய் வீல்ஸ், புதிய ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்ஸ், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ், ரியர் பம்பரில் ஃபாக்ஸ் டூயல் எக்ஸாஸ்ட் டிப்ஸ் மற்றும் நம்பர் பிளேட் இடைவெளிக்கு மேலே ஒரு எல்இடி லைட் பார் ஆகியவற்றைப் பெறுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ் இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ் இப்போது முழு டிஜிட்டல் 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 17 அடாப்டிவ் டிரைவிங் ஃபங்ஷன்ஸ் கொண்ட லெவல் 2 ஏடாஸ் சூட், ஒரு பனோரமிக் சன்ரூஃப், ஒரு திருத்தப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் டூயல்-ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும், அது 360 டிகிரி கேமரா, வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், எய்ட்-வே அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் சென்டர் கன்சோலில் புதிய ஏசி வென்ட்ஸ்.
2023 செல்டோஸ் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
கியா செல்டோஸ் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் கிடைக்கிறது. சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் நிலையானது, அதே நேரத்தில் சிவிடீ யூனிட் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட் ஆகியவை ஆப்ஷன்ஸில் கிடைக்கின்றன. மேலும் ஒரு புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்பட உள்ளது. இந்த இன்ஜின் ஐஎம்டீ யூனிட் அல்லது செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிடுடன் இணைக்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்