- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 10,89,900 (எக்ஸ்-ஷோரூம்)
- ஏடாஸ் வேரியண்ட்ஸில் 47 சதவீத புக்கிங்ஸை பெற்றது
ஜூலை 2023 இல் லான்ச் ஆன கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் இப்போது இரண்டே மாத்ததில் 50,000 புக்கிங்ஸை பெற்று சாதனையை எட்டியது. இதனுடன், அதிக போட்டி நிறைந்த மிட்-எஸ்யுவி செக்மெண்ட்டில் ஓஇஎம்ஸை வேகமாக கடக்கும் ஒன்றாக கியா மாறியுள்ளது. அனைத்து முன்பதிவுகளில் 47 சதவீதம் ஏடாஸ் பொருத்தப்பட்ட வேரியண்ட்ஸ்க்காக செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகளில், கியா இந்தியா செல்டோஸ் லைன்-அப்பில், இந்த பண்டிகை காலத்திற்கான இரண்டு புதிய ஏடாஸ் வேரியண்ட்ஸை லான்ச் செய்துள்ளது. இதில் GTX+ (S)மற்றும் X-லைன் வேரியண்ட்ஸ் இப்போது ஏடாஸ் சேஃப்டி ஃபீச்சரை பெறுகின்றன, முறையே ரூ. 19.40 லட்சம் மற்றும் ரூ. 19.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ளது.
செல்டோஸின் வெற்றி குறித்து கியா இந்தியாவின் சீஃப் சேல்ஸ் மற்றும் பிசினஸ் ஆஃபீஸர் மியுங்-சிக் சோன் கூறுகையில், 'புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு செல்டோஸ் மிகவும் நம்பகமான மற்றும் வசதியான டிரைவிங் அனுபவத்தை தருவதாக மாறியுள்ளது. டிசைன் மற்றும் டெக்னாலஜி ஆகியவை இணைந்து காரின் மதிப்பு மற்றும் அதன் மெகா வெற்றிக்கு இது ஒரு பெரிய காரணம். அதிகமான தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, காத்திருப்பு காலத்தை குறைந்தபட்சமாக வைத்திருக்க எங்கள் உற்பத்தியை மேம்படுத்தியுள்ளோம், இதனால் எங்கள் வாடிக்கையாளர்கள் பெற காத்திருக்க வேண்டியதில்லை' என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்