- ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் நியூ- ஜெனரேஷன் கார்னிவல் காட்சிப்படுத்தப்பட்டது
- ஃபோர்த்-ஜெனரேஷன் எம்பீவியின் ஃபேஸ்லிஃப்டட் வெர்ஷன் விரைவில் இந்திய மார்க்கெட்டிற்கு வரும்
நியூ கியா கார்னிவல் லான்ச் டைம்லைன்
கியா இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் ஃபோர்த்-ஜெனரேஷன் கார்னிவல்லை காட்சிப்படுத்தியது. அதே நேரத்தில், இந்த பிராண்ட் எம்பீவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இன்டர்நேஷனல் மார்க்கெட்டில் டெஸ்டிங் செய்து வருகிறது, இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2024 கார்னிவல் எக்ஸ்டீரியர் டிசைன்
நியூ கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை; எனவே, ஸ்பை ஷாட்ஸின் அடிப்படையில் எங்களிடம் சில விவரங்கள் உள்ளன. இந்த மாடலில் வெர்டிகல்லி அடுக்கப்பட்ட ஹெட்லேம்ப்ஸ், புதிய கிரில் மற்றும் அலோய் வீல்ஸ், ரூஃப் ரெயில்ஸ், இரண்டு சன்ரூஃப்ஸ், திருத்தப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், தலைகீழான L-வடிவ எல்இடி டெயில்லைட்ஸ், உயர் பொருத்தப்பட்ட ஸ்டாப் லேம்ப் மற்றும் டெயில்கேட் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் ஹோல்டர் ஆகியவை கிடைக்கும்.
கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட் இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
ஃபேஸ்லிஃப்டட் கியா கார்னிவலின் புதுப்பிப்புகள் தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவரவில்லை. ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டாஷ்போர்டில் இரண்டு 12.3-இன்ச் ஸ்கிரீன்ஸ், எலெக்ட்ரிக்கலி இயக்கப்படும் ரியர் டோர்ஸ், ஃபுல்லி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஏடாஸ், ரியர் என்டர்டைன்மெண்ட் ஸ்கிரீன்ஸ், டூயல்-டோன் தீம் மற்றும் த்ரீ-ஸ்போக் மல்டிஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தது.
வரவிருக்கும் கியா கார்னிவல் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
2024 கியா கார்னிவல் அதே 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் எயிட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு, 200bhp மற்றும் 400Nm டோர்க்கை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் வரும் மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்