- ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் i20 N லைனில் அதிக தள்ளுபடியைப் பெறுகிறது
- ஐந்து வேரியண்ட்ஸில் கிடைக்கும்
ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் செப்டம்பர் 8, 2023 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ப்ரீமியம் ஹேட்ச்பேக், எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா (O) ஆகிய ஐந்து வேரியண்ட்ஸில் ரூ. 6.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இப்போது, அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள், ஹேட்ச்பேக் ஏற்கனவே தள்ளுபடியுடன் விற்பனையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
புதிய i20 ஐ முன்பதிவு செய்யத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் ரூ. 10,000 வரை தள்ளுபடியை பெறலாம். மறுபுறம், ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 N லைன் தற்போது ரூ. 50,000 வரையிலான சலுகைகளை ஈர்க்கிறது. இந்த சலுகைகள் கேஷ் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் போனஸ் போன்ற வடிவங்களில் பெறலாம்.
ஹூண்டாய் i20 ஆனது 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஐவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 82bhp மற்றும் 115Nm பீக் டோர்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மிகவும் சக்திவாய்ந்த i20 N லைனில் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டர்போ-பெட்ரோல் மோட்டார் 118bhp மற்றும் 172Nm டோர்க்கை வெளிப்படுத்தும் திறனை கொண்டது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்