- ஐந்து வேரியண்ட்ஸில் வழங்கபடும்
- இந்தியாவில் ஆரம்பம் விலை ரூ. 6.99 லட்சம்
ஹூண்டாய் இந்தியா தனது பிரபலமான ஹேட்ச்பேக், i20 இன் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் விலையை அறிவித்துள்ளது. இந்த அப்டேட்ட பலேனோ போட்டியாளர் எட்டு எக்ஸ்டீரியர் வண்ண விருப்பங்களில் ஐந்து வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. புதிய எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் உடன் புதிய i20 இப்போது ஆரம்ப விலையாக ரூ. 6.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
இந்தக் கட்டுரையில், இந்தியாவின் டாப் 10 பிரபலாமான நகரங்களில் (10 செப்டம்பர், 2023 நிலவரப்படி) ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட்டின் ஆன்-ரோடு விலைகளைப் பட்டியலிட்டுள்ளோம்:
நகரங்கள் | i20 ஏரா எம்டீ (பேஸ் வேரியண்ட்) | i20 அஸ்டா (O) ஐவிடீ (டாப் வேரியண்ட்) |
மும்பை | ரூ. 8.25 லட்சம் | ரூ. 13.11 லட்சம் |
சென்னை | ரூ. 8. 18 லட்சம் | ரூ. 13.43 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 8.17 லட்சம் | ரூ. 13.42 லட்சம் |
மதுரை | ரூ. 8.17 லட்சம் | ரூ. 13.42 லட்சம் |
பெங்களூரு | ரூ. 8.45 லட்சம் | ரூ. 13.65 லட்சம் |
திருப்பூர் | ரூ. 8.17 லட்சம் | ரூ. 13.42 லட்சம் |
ஹைதராபாத் | ரூ. 8.44 லட்சம் | ரூ. 13.64 லட்சம் |
கொச்சி | ரூ. 8.36 லட்சம் | ரூ. 13.41 லட்சம் |
திருச்சிராப்பள்ளி | ரூ. 8.17 லட்சம் | ரூ. 13.42 லட்சம் |
டெல்லி | ரூ. 7.99 லட்சம் | ரூ. 12.91 லட்சம் |
அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏழு ஸ்பீக்கர்ஸ் கொண்ட போஸ் மியூசிக் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல், இபிடி உடன் ஏபிஎஸ், இஎஸ்சி, எச்ஏசி, விஎஸ்எம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ், த்ரீ-பாயிண்ட் சீட்பெல்ட் மற்றும் ஆறு ஏர்பேக்ஸ் போன்ற அம்சங்கள் ரேஞ்சில் உள்ள எல்லா வேரியண்ட்ஸுக்கும் பொருத்தப்பட்டுள்ளன.
i20 ஆனது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஐவிடீ யூனிடுடன் இணைக்கப்பட்ட ஒரே 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 82bhp மற்றும் 115Nm பீக் டோர்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.