- அடல்ட் மற்றும் சைல்ட் சேஃப்டியில் முற்றிலும் பாதுகாப்பானது
- ஏடாஸ் அம்சங்களுடன் மேலும் நிறையை அம்சங்களை பெறுவீர்கள்
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. யூரோ என்கேப் சமீபத்தில் வெளியிட்ட இந்த லக்சுரி காரின் கிராஷ் டெஸ்ட் தரவுகளின்படி, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபைவ் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
இந்த காரில் உள்ள ஆக்சிடென்டல் ப்ரீவேன்ஷன் டெக்னாலஜியை பயன்படுத்தி, காரில் அடல்ட் பாதுகாப்புக்கு 83 சதவீதமாகவும், சைல்ட் பாதுகாப்பில் 88 சதவீதமாகவும், முக்கிய சாலைகளில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு விகிதம் 84 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வோக்ஸ்வேகன் டிகுவான் சர்வதேச சந்தையில் மூன்றாவது ஜெனரேஷன் மாடலாக உள்ளது, இதில் பல அட்வான்ஸ் டிரைவிங் அசிஸ்டன்ஸ் மற்றும் பல எலக்ட்ரானிக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சைக்கிள், ஸ்கூட்டர் அல்லது வேறு ஏதேனும் வாகனம் பின்னால் வருவதைக் கண்டறிந்தால், காரில் உள்ள பயணிகள் கதவைத் திறப்பதைத் தடுக்கும் எக்சிட் வார்னிங் சிஸ்டம் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன், ரியர் பயணிகள் கம்பார்ட்மெண்ட் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்த எஸ்யுவியில் சைட் ஏர்பேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஐரோப்பிய என்கேப் கிராஷ் டெஸ்ட்டின் புள்ளிவிவரங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை, குறிப்பாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டை விட இந்த டெஸ்ட் மிகவும் கடினமாக இருந்தது. இந்த லக்சுரி கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தகவலுக்கு, தற்போது அதன் லாஸ்ட் ஜெனரேஷன் மாடல் இந்தியாவில் விற்பனையில் உள்ளது, இது பெட்ரோல் வேரியன்ட் மாடலாகும். விரைவில் இந்த கார் இந்தியாவிலும் தயாரிக்கப்படும் என்றும், இது நாட்டின் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்