- 2025ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- பிக்ஸ்டர் என்ற பெயரில் லான்ச் செய்யப்படலாம்
டாஷிய டஸ்டரின் புதிய அவதாரத்தை வரும் ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ரெனோ இந்தியா தயாராகி வருகிறது. இருப்பினும், நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த புதிய ஜெனரேஷன் த்ரீ-ரோ டஸ்டர் சர்வதேச அளவில் சோதனை செய்யப்பட்டதைக் கண்டறிந்தது, இது அறிமுகப்படுத்தப்பட்டபோது பிக்ஸ்டர் என்று அழைக்கப்படலாம்.
சோதனையின் போது பெறப்பட்ட படங்களில், புதிய அவதாரத்தில் உள்ள இந்த த்ரீ-ரோ டஸ்டர் ஸ்டைலின் அடிப்படையில் மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறது. இந்த புதிய எஸ்யுவியில் ஃபங்ஷனால் ரூஃப் ரெயில்ஸ், எக்ஸ்டென்டெட் ரூஃப் ஸ்பாய்லர், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் சதுர வீல் அர்ச்செஸ் உள்ளன.
கூடுதலாக, இது பில்லரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டல்ஸ், இன்வர்டெட் சி-வடிவ எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் மல்டி-ஸ்போக் பிளாக்-அவுட் அலோய் வீல்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.
கேபினின் இன்டீரியரைப் பற்றி பேசினால், இந்த எஸ்யுவியில் ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டில்டெட் ஃபிலோட்டிங்க் என்டர்டைன்மெண்ட் ஸ்கிரீன் மற்றும் டிரைவருக்கு எலக்ட்ரிகள்ளி அட்ஜஸ்டெப்ள சீட் ஆகியவை இருக்கலாம். இது தவிர, இந்த எஸ்யுவி ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா மற்றும் ஏடாஸ் போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டஸ்டர் ஐந்து மற்றும் ஏழு சீட்டர் கொண்ட இரண்டு வேரியன்ட்ஸில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 1.6 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் உடன் வெளியிடப்படலாம். நிறுவனம் இந்த ரெனோ டஸ்டரை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டு விருப்பங்களில் வழங்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்