- இரண்டு இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கும்
- 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சுஸுகி நிறுவனம் புதிய ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹேட்ச்பேக் இரண்டு இன்ஜின்கள் மற்றும் 13 வண்ண விருப்பங்களில் கிடைக்கும். உலகளாவிய விவரக்குறிப்பு சுஸுகி ஸ்விஃப்ட் மூன்று ட்ரிம்ஸில் கிடைக்கிறது, இதில் XG, ஹைப்ரிட் MX மற்றும் ஹைப்ரிட் MZ ஆகியவை அடங்கும்.
எக்ஸ்டீரியரில், நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டின் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் தற்போதைய ஜெனரேஷனிலிருந்து சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. ஃப்ரண்ட்டில், புதிய ஸிலீக் கிரில், எல்-வடிவ எல்இடி டிஆர்எல்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ், 16-இன்ச் அலோய் வீல்ஸ், தலைகீழாக சி-வடிவ எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் பின்புற டோரில் பொருத்தப்பட்ட டோர் ஹேண்டல்ஸ் ஆகியவற்றைப் பெறும்.
புதிய ஜென் ஸ்விஃப்ட்டின் வண்ண விருப்பங்கள்
இந்த ஜப்பானிய மாடல் ஃபிராண்டியர் ப்ளூ, கூல் யெல்லோ, பர்னிங் ரெட், ஃபிளேம் ஆரஞ்சு, கேரவன் ஐவரி, ப்யூர் ஒயிட், ப்ரீமியம் சில்வர், ஸ்டார் சில்வர், சூப்பர் பிளாக், ஃபிரான்டியர் ப்ளூ உடன் பிளாக் ரூஃப், பர்னிங் ரெட் உடன் பிளாக் ரூஃப், கூல் யெல்லோ உடன் பிளாக் ரூஃப் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. பிளாக் ரூஃப் உடன் கூடிய ப்யூர் ஒயிட் இந்த 13 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
உட்புறத்தைப் பொறுத்தவரை, நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் பலேனோ மற்றும் முன்பக்கத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கேபினைக் கொண்டுள்ளது. அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர்வியூ கேமரா, ஸ்டீயரிங் மவுண்டட் கன்ட்ரோல்ஸ், ஆறு ஏர்பேக்ஸ், கீலெஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், 360 டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் ஏடாஸ் தொகுப்புடன் வழங்கப்படும்.
சுஸுகி ஸ்விஃப்ட் உலக சந்தையில் இரண்டு இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது, இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் மோட்டார் அடங்கும். டிரான்ஸ்மிஷனுக்காக இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ கியர்பாக்ஸ் தேர்வு இருக்கும். இந்த சுஸுகி ஹேட்ச்பேக் ஆல் வீல் டிரைவ் மற்றும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் விருப்பத்துடன் கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்