- பஸால்ட்டின் ஆரம்ப விலை ரூ. 7.99 லட்சம்
- இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகின்றன
சிட்ரோயன் இந்தியா பஸால்ட்டின் பேஸ்-ஸ்பெக் விலையை வெளியிட்டுள்ளது. இந்த கூபே-எஸ்யுவி ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாகன உற்பத்தியாளர் முழு வரிசைக்கான விலைத் தகவலைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பிராண்ட் தற்போது பேஸ்-ஸ்பெக் விலையை மட்டுமே வெளியிட்டது.
படங்களில் பார்ப்பது போல், பஸால்ட்டின் 1.2 யூ-ட்ரிம் வேரியன்ட்டில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்ஸ், ஹாலோஜன் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் வீல் கவர்கள் இல்லாத ஸ்டீல் வீல்களுடன் வருகிறது. கூடுதலாக, இது பிளாக்ட்-அவுட் ஸ்கிட்-ப்ளேட்ஸ் மற்றும் டோர் ஹேண்டல்ஸைக் கொண்டுள்ளது. கூடுதலாக, ஓஆர்விஎம்களுக்கு மேட் பிளாக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அலோய் வீல்ஸ், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ஸ்கிட் பிளேட்களுக்கான சில்வர் ஃபினிஷ், டோர் மற்றும் வீல் கிளாட்டிங், ஃபாக் லைட்ஸ் மற்றும் ஷார்க்-ஃபின் ஆன்டெனா ஆகியவை இதில் வழங்கப்படவில்லை.
பஸால்ட்டின் பேஸ்-ஸ்பெக் மாடல் டிஜிட்டல் மற்றும் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஃப்ரண்ட் பவர் விண்டோ, த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங், பிளாக் மற்றும் கிரே அப்ஹோல்ஸ்டரி, ஃப்ரண்ட் ட்வீட்டர்ஸ் மற்றும் ஸ்பீக்கர்ஸ், 12V போர்ட், ஃப்ரண்ட் கப் ஹோல்டர்ஸ் மற்றும் சீட்ஸ்க்கான ஹெட்ரெஸ்ட்களுடன் வருகிறது. இருப்பினும், டாப்-ஸ்பெக் மாடலுடன் ஒப்பிடும்போது, டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட ஃபங்ஷன், செகண்ட்-ரோ சீட்ஸ்களுக்கு த்ரீ-ஸ்டெப் அட்ஜஸ்ட்டெபல் தை சப்போர்ட், ஃபிளிப்-கீ, வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ-கனெக்ட் மற்றும் பவர்ட் ஓஆர்விஎம்ஸ் போன்ற அம்சங்கள் இல்லை.
இயந்திர ரீதியாக, சிட்ரோன் பஸால்ட் 1.2-லிட்டர் என்ஏ மற்றும் டர்போ-சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினைப் பெறும். இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்