இம்மாதம் அதாவது மே, 2024 மாதத்தில் இந்திய சந்தையில் பல கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு இதுவரை பல நிறுவனங்கள் தங்கள் கார்களை அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளன. கடந்த மாதம், டொயோட்டாவின் டைசர் மற்றும் சமீபத்தில் மஹிந்திராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி XUV 3XO அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில், அதாவது மே 2 ஆம் தேதி, ஃபோர்ஸ் கூர்கா அறிமுகப்படுத்தப்பட்டது, இது கடந்த வாரம் காட்சிப்படுத்தப்பட்டது, அதனுடன், இசுஸுவின் வி-கிராஸும் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த மாதத்தில் வெளியிடப்படும் மற்ற வரவிருக்கும் கார்களைப் பார்ப்போம்.
நியூ ஜெனரேஷன் மாருதி ஸ்விஃப்ட்
மாருதி சுஸுகி தனது மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் ஸ்விஃப்ட்டின் நியூ ஜெனரேஷன்க்கான முன்பதிவுகளை ரூ. 11,000க்கு சமீபத்தில் தொடங்கியது. இந்த மாடலின் ஃபோர்த் ஜெனரேஷன் இதுவாகும், இது இம்மாதம் 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.
இருப்பினும், மாருதி பல டீசர்களை வெளியிட்டுள்ளது, இது அதன் பல அம்சங்கள், மைலேஜ் மற்றும் இன்ஜின் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது. இப்போது லீகான தகவல்களின்படி, 2024 ஸ்விஃப்ட் 1.2 லிட்டர், த்ரீ சிலிண்டர், Z12E பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும். இதில் ஹைபிரிட் மோட்டார் பொருத்தப்படுமா இல்லையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
டாடா நெக்ஸான்ஐசிஎன்ஜி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நடந்த பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் ஐசிஎன்ஜியை காட்சிப்படுத்தியது. தற்போது நெக்ஸான் பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் வெர்ஷனில் கிடைக்கிறது. இப்போது சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகம் செய்யப்படுவதால், இது எல்லா இன்ஜின் வேரியன்ட்டில் வழங்கப்படும் காராக மாறும்.
மாருதி ப்ரெஸ்ஸாவைத் தவிர, நெக்ஸனுக்குப் போட்டியாக வேறு கார் இல்லை, ஏனெனில் சோனெட், வென்யூ, கைகர் மற்றும் சமீபத்தில் லான்ச்சான XUV 3XO ஆகியவற்றில் சிஎன்ஜி வேரியன்ட் வழங்கப்படவில்லை. இருப்பினும், ஃப்ரோன்க்ஸ் மற்றும் டைசர் சிஎன்ஜி வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது. இது தொடர்பான மற்ற செய்திகளுக்கு, எங்கள் வெப்சைட்டைப் பார்வையிடலாம்.
நியூ போர்ஷே பனமெரா
போர்ஷே பனமெரா கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 1.68 கோடி. இது இந்த மாடலின் தர்ட் ஜெனரேஷனாகும், இதில் இன்ஜினுடன் பல அம்ச மேம்படுத்தல்கள் செய்யப்பட்டன, இப்போது இது மே 4 ஆம் தேதி அதாவது நாளை அறிமுகப்படுத்தப்படும்.
இந்த வெளியீடுகள் அனைத்தையும் பற்றிய மேலும் முழுமையான தகவல்களுக்கு, எங்களுடன் இணைந்து இருங்கள் மற்றும் எங்கள் வெப்சைட்டில் தினமும் புதிய தகவல்களைப் பெறுங்கள்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்