இந்த மாதம் இந்திய கார் சந்தையில் புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு புதிய எஸ்யுவி, இரண்டு ப்ரீமியம் மின்சார வாகனங்கள், ஒரு சொகுசு செடான் மற்றும் ஒரு சொகுசு ஹேட்ச்பேக் ஜூலை 2024 இல் அறிமுகப்படுத்தப்படும். இந்த கார்களைப் பற்றி விரிவாகப் இதில் பார்போம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் EQA
இம்மாதம் மெர்சிடிஸ்-பென்ஸ் EQA அறிமுகத்துடன் மாதம் தொடங்கும், இதன் விலை ஜூலை 8 அன்று அறிவிக்கப்படும். இது GLA இன் எலக்ட்ரிக் வெர்ஷனாகும், இதில் 70.5kWh பேட்டரி மற்றும் சிங்கிள் மோட்டார் இருக்கும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 560 கிமீ தூரம் செல்லும் மற்றும் 188bhp பவரையும், 385Nm டோர்க் திறனையும் வெளிப்படுத்தும்.
நியூ-ஜெனரேஷன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்
பிஎம்டபிள்யூவின் எட்டாவது ஜெனரேஷன் 5 சீரிஸ் ஜூலை 24 அன்று அறிமுகப்படுத்தப்படும். இது முதல் முறையாக LWB இல் கிடைக்கும் மற்றும் 530Li எம் ஸ்போர்ட் வேரியன்ட்டில் வரும். இது 2.0-லிட்டர் ஃபோர்-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும், இது மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் உடன் வரும். இதில் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும்.
நிசான் X-ட்ரைல்
நிசான் X-ட்ரைல் இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும். இந்த த்ரீ-ரோ எஸ்யுவி நிசான் மேக்னைட்டுடன் ஷோரூம்களில் காணப்படும். X-ட்ரைல் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்ஸ், டூயல்-டோன் அலோய் வீல்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் ஏடாஸ் அம்சங்களை உள்ளடக்கியிருக்கும்.
மினி கூப்பர் S
மினி கூப்பர் S காரின் விலை ஜூலை 24 அன்று அறிவிக்கப்படும். இது 2.0-லிட்டர் ஃபோர்-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் 201bhp பவரை உருவாக்கும். இந்த கார் ஐந்து வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக்
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் ஜூலை 24 அம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இது 66.45kWh பேட்டரி பேக் மற்றும் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் கஸ்டமைசேபிள் எல்இடி டிஆர்எல், சர்க்குலர் ஓஎல்இடி டிஸ்ப்ளே, மினி எக்ஸ்பீரியன்ஸ் மோட்ஸ், டிஜிட்டல் கீ ப்ளஸ், மின்சாரம் சரிசெய்யக்கூடிய ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் டிரைவர் சீட்க்கு மசாஜ் ஃபங்ஷன் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
இந்த புதிய கார்ஸ் அனைத்தும் இந்திய சந்தையில் புதிய டெக்னாலஜி மற்றும் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்