நீங்கள் ரூ. 10-12 லட்சம் ரேஞ்சில் புதிய கார் வாங்க நினைத்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் மூன்று பட்ஜெட் கார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. பிராண்ட்ஸ் அவற்றின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை. செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த கார்ஸை பற்றி இந்த கட்டுரையில் சொல்ல போகிறோம்.
ஹோண்டா எலிவேட்
ஹோண்டா கார்ஸ் இந்தியா அதன் மிட்-சைஸ் எஸ்யுவி எலிவேட்டின் விலையை செப்டம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப் போகிறது. எலிவேட் 1.5 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்படும்.
இது ஏடாஸ், வயர்லெஸ் கனெக்டிவிட்டி உடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், எல்இடி லைட்ஸ் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறும்.
பிராண்டின் படி, அதன் ப்யூர்-எலக்ட்ரிக் வெர்ஷனில் வேலை நடந்து வருகின்றன, இது வரும் மூன்று ஆண்டுகளில் வெளியிடப்படும். இது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் சிட்ரோன் C3 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்
சமீப மாதங்களில் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பல முறை இந்திய சாலைகளில் ஸ்பை டெஸ்டிங்கில் காணப்பட்டது. நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் செப்டம்பர் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை உங்களுக்குச் தெரிவிக்கிறோம். சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவி இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் பல மாற்றங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய மாடலில் உள்ள அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்படும். டாடா இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியை டிசிடீ கியர்பாக்ஸுடன் வழங்கலாம்.
இது அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, நெக்ஸான் ரூ. 9.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கின்றன. இது மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மஹிந்திரா XUV300, ரெனோ கைகர் மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ்
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிராண்ட் அதன் எலக்ட்ரிக் எடிஷனை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தலாம்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் அதன் ஹேட்ச்பேக் எடிஷன் போலவே லைவ், ஃபீல் மற்றும் ஷைன் ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் வழங்கப்படும். அம்சங்களைப் பொறுத்தவரை, இது 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் டிஃபாக்கர் ஆகியவற்றைப் பெறும். ஐஆர்விஎம், எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் ஓஆர்விஎம்’ஸ், டீபீஎம்எஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்களையும் பெறும்.
இது 1.2-லிட்டர், ஃபோர் சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது 109bhp மற்றும் 190Nm டோர்க்கை உருவாக்கும். சிட்ரோன் C3 ஏர்கிராஸை மேனுவல் கியர்பாக்ஸுடன் அறிமுகப்படுத்தினாலும், பிராண்ட் 2024 ஆம் ஆண்டிற்குள் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை இதில் சேர்க்கலாம்.
C3 ஏர்கிராஸ் ரூ. 9.50 லட்சம் முதல் ரூ. 13 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கு இடையே இருக்கலாம். இது ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்