அறிமுகம்
ஜூலை மாதம் தொடங்கிவிட்டதால், மழைக்காலத்துடன் எங்கள் முயற்சியைத் தொடங்க உள்ளதால், கார் உற்பத்தியாளர்களும் ஒரு பிஸியான மாதத்தை வரவழைப்பதாகத் தெரிகிறது. இந்த மாதம் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி, எம்பீவி மற்றும் பி-எஸ்யுவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல்ஸைப் பற்றி மேலும் விரிவாகப் பார்ப்போம்.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் - 4 ஜூலை
செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டு நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்ஸில் ஒன்றாகும். இப்போது, கியா இந்தியா இந்த மேம்படுத்தப்பட்ட போட்டியாளரான மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா போட்டியாளருக்கு அடுத்த வாரம் போட்டியிட தயாராக உள்ளது.
பலவிதமான காஸ்மெட்டிக் மற்றும் ஃபீச்சர்ஸைத் தவிர, கியா செல்டோஸ் புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டாருடன் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது, இது 1.4-லிட்டர் BS6 ஃபேஸ் 2 எமிஷன் நடைமுறைக்கு வந்த பிறகு நிறுத்தப்பட்டது. இது தவிர, 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5-லிட்டர் டீசல் மோட்டாரில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸின் ஸ்பை ஷாட்ஸ் ஏற்கனவே வெளிவந்துள்ளன, இது வரவிருக்கும் எஸ்யுவியின் முக்கிய விவரங்களை வெளிப்படுத்துகிறது.
மாருதி இன்விக்டோ - 5 ஜூலை
இன்விக்டோ எனப்படும் இனோவா ஹைகிராஸ்-அடிப்படையிலான எம்பீவி’யின் விலைகளை மாருதி சுஸுகி ஜூலை 5 ஆம் தேதி அறிவிக்கும். முன்னதாக என்கேஜ் என பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாடல், ஆல்ஃபா ப்ளஸ் என்ற ஒற்றை வேரியண்ட்டில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்விக்டோ எம்பீவி 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்படும். இந்த ஹைப்ரிட் அமைப்பு இ-சிவிடீ யூனிட் வழியாக வீல்ஸ்க்கு பவரை அனுப்புகிற ஒரே டிரான்ஸ்மிஷனாக இருக்கும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் - 10 ஜூலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹூண்டாய் இந்திய மார்க்கெட்டுக்கு எக்ஸ்டர் என்ற புதிய பி-எஸ்யுவியை அறிவித்தது. டாடா பஞ்சின் போட்டியாளர் ஜூலை 10 ஆம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்தப்படும், மேலும் இந்த மாடலுக்கான முன் பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த செக்மென்ட்டின் முதல் டூயல் கேமராஸ் கொண்ட டாஷ்-கேம், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஆறு ஏர்பேக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை எக்ஸ்டர் பெறும்.
எக்ஸ்டரில் 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டார் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் அல்லது ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்படும். மேலும் இதன் சிஎன்ஜி வெர்ஷனும் வழங்கப்பட உள்ளது, இதன் விலைகள் வெளியீட்டு அன்றே வெளியிடப்படும்.
ஹோண்டா எலிவேட் – விரைவில்
எலிவேட் விரைவில் நாட்டில் உள்ள மிட்-சைஸ் எஸ்யுவிசெக்மென்ட்டில் ஹோண்டாவிற்கான இடத்தை இது எடுக்கும். மே 2023 இல் வெளியிடப்பட்டது, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் கார் தயாரிப்பாளரால் அறிமுகப்படுத்தப்படும் ஐந்து எஸ்யுவிகளில் ஒன்றான க்ரெட்டா போட்டியாளராகவும் இது அடங்கும். இந்த மாடலின் வெளியீடு மற்றும் விலை அறிவிப்பு பண்டிகைக் காலத்தில் நடைபெறும்.
எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியில் 1.5 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் இன்ஜின் மூலம் 113bhp மற்றும் 143Nm டோர்க்கை உருவாக்கும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்கள் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் அல்லது சிவிடீ யூனிட் உடன் வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டிற்குள் எலக்ட்ரிக்வெர்ஷனை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஹோண்டா இவி வழியில் செல்லும் என்பதால், ஹைப்ரிட் இருக்காது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்