இந்த மாத தொடக்கத்தில் பல்வேறு நிறுவனங்களின் கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2024 ஏப்ரல் மாதத்திற்கான புதிய கார்களின் பட்டியலை சமீபத்திய பகுதியில் கொண்டு வர ஆவலுடன் உள்ளோம். இந்த மாதம் பல்வேறு பிரிவுகளிலும் விலை ரேஞ்சிலும் அதிக கார்கள் அறிமுகப்படுத்தப்படும். வாருங்கள் வரவிருக்கும் ஒவ்வொரு காரையும் விரிவாக அறிந்து கொள்வோம்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
அர்பன் க்ரூஸர் டைசர் என்பது டொயோட்டா ஃப்ரோன்க்ஸ் கூபேயின் எஸ்யுவி வெர்ஷனாகும், மேலும் இந்த மாடல் ஏப்ரல் 3, 2024 அன்று லான்ச் ஆக உள்ளது. மாருதி பலேனோ-அடிப்படையிலான இந்த மாடலின் ஒட்டுமொத்த ஃபார்முலாவின் சில அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இது வேறுபட்டதாக இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.
டிசைன்னைப் பொறுத்தவரை, புதிய டெசரில் திருத்தப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், மாற்றப்பட்ட ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லைட்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்கள் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்டீரியரில், இது புதிய அமைப்பைக் காட்டிலும் திருத்தப்பட்ட அம்சப் பட்டியலின் வடிவத்தில் வர வாய்ப்புள்ளது. இது 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீட் மேனுவல் யூனிட் அல்லது ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. தவிர, இது சிஎன்ஜி வெர்ஷனிலும் வரலாம்.
ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடீ ப்ளஸ் ஸ்போர்ட்
இந்த கார் இந்த மாத தொடக்கத்தில் பிராண்டின் வருடாந்திர மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட மூன்று மாடல்களில் ஒன்றாகும். ஃபோக்ஸ்வேகன் இன்னும் இதன் வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை என்றாலும், டிகுவான் ஜிடீ ப்ளஸ் ஸ்போர்ட் ஏப்ரல் 2024 இல் வெளியிடப்படலாம்.
ஸ்டாண்டர்ட் டைகுன் உடன் ஒப்பிடும்போது, ஜிடீ ப்ளஸ் ஸ்போர்ட் வேரியன்ட் கார்பன் ஸ்டீல் க்ரே ரூஃப், டார்க் எல்இடி ஹெட்லேம்ப்கள், 17-இன்ச் பிளாக்-அவுட் அலோய் வீல்கள், ரெட் பிரேக் காலிப்பர்கள் மற்றும் ஃப்ரண்ட் அக்சல் பிளாக்-அவுட் போன்ற சிறிய ஒப்பனை புதுப்பிப்புகளைப் பெறுகிறது. மீதமுள்ள காரின் பெரும்பாலான பகுதிகள் பிளாக் பெயின்ட்டை பெறுகின்றன. உள்ளே, இது கான்ட்ராஸ்ட் ரெட் ஸ்டிச்சிங், ஸ்போர்ட் ஸ்டீயரிங் வீல், அலுமினியம் பெடல்கள் மற்றும் ஃப்ரண்ட் சீட்டின் பின்புறத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஜிடீ லோகோவுடன் பிளாக் அப்ஹோல்ஸ்டரியைப் பெறும்.
ஃபோர்ஸ் கூர்கா 5-டோர்
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்த மாத இறுதியில் கூர்காவின் 5- டோர்ரை லான்ச் செய்ய உள்ளது. ஏப்ரல் 23 மற்றும் 26, 2024 க்கு இடையில் நடைபெறும் மீடியா டிரைவ்களுக்காக வாகன உற்பத்தியாளர் ஏற்கனவே பலருக்கு அழைப்புகளை அனுப்பியுள்ளார்.
5-டூர் கூர்காவும் அதன் 3-டோரில் நாம் பார்த்த அதே 2.2-லிட்டர் டீசல் இன்ஜினைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம், இருப்பினும் சற்றே அதிக டியூனுடன். இந்த இன்ஜின் தற்போது 90bhp/250Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. வெளியீட்டிற்குப் பிறகு, 5-டோர் ஃபோர்ஸ் கூர்கா 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வரவிருக்கும் 5-டோர் தார் உடன் போட்டியிட வாய்ப்புள்ளது.
மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்டின் சோதனை சில மாதங்களுக்கு இன்னும் தொடரும். இந்த புரொடக்ஷன் ரெடி காரின் ஸ்பை படங்கள், அறிமுகம் வெகு தொலைவில் இல்லை என்பதை தெளிவாக்குகிறது. இது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்களுடன் இணைக்கப்படும்.
எக்ஸ்டீரியர் டிசைனைப் பொறுத்தவரை, மாற்றங்களைப் பொறுத்தவரை, இந்த மாடலில் திருத்தப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள், புதிய அலோய் வீல்கள், பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏடாஸ் சூட் மற்றும் புதிய அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் வருகிறது.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
நவம்பரில் டோக்கியோவில் நடந்த 2023 ஜப்பானிய மொபிலிட்டி ஷோவில் வெளியிடப்பட்ட நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட், இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகும். இந்த மேம்படுத்தப்பட்ட ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் டெஸ்ட் மாடல் ஏற்கனவே நாடு முழுவதும் சோதனைக்கு உட்பட்டுள்ளன.
புதிய ஸ்விஃப்ட் எக்ஸ்டீரியரில் ஹெட்லேம்ப்கள், கிரில், பம்ப்பர்கள், வீல், டெயில்லைட்ஸ் மற்றும் ரியர் டோரில் ஹேண்டல்ஸ்ஸை சி-பில்லரில் இருந்து டோர்க்கு மாற்றியமைத்தல் போன்ற புதிய எலிமெண்ட்ஸ் முழுமையான புதிய வடிவமைப்பைப் பெறுகிறது. இது ஒரு புதிய டச்ஸ்கிரீன் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், லெவல்-2 ஏடாஸ் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏர் வெண்ட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. மேலும், இந்த காரில் ஒரு புதிய 1.2- லிட்டர், த்ரீ சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது ஒரு ஹைப்ரிட் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது சிவிடீ யூனிட் மூலம் வீல்க்கு சக்தியை அனுபுகிறது.
எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
குளோஸ்டர் த்ரீ-ரோ எஸ்யுவி முக்கியமாக சிறிய புதுப்பிப்புகளில் கவனம் செலுத்துகிறது எம்ஜி, இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் ரேஞ்சில் எந்த புதுப்பிப்புகளையும் பெறவில்லை. புதுப்பித்த ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், புதிய கிரில் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் டைமண்ட்-கட் அலோய் வீல்கள் உடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
2024 குளோஸ்டரின் இன்டீரியர் மாற்றங்கள் குறித்த விவரங்கள் தற்போது தெரியவில்லை. இந்த மாடல் அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் டர்போ மற்றும் ட்வின் டர்போ ஆப்ஷனில் வர வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட குளோஸ்டர் ஜீப் மெரிடியன், ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்