- இரண்டும் இரண்டு வரியண்ட்ஸில் வழங்கப்படுகின்றன
- செப்டம்பர் முதல் டெலிவரி தொடங்கும்
பிஎம்டபிள்யூ இந்தியா இன்று இரண்டு புதிய மினி மாடல்கள் மற்றும் ஏய்த் ஜெனரேஷன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்ஸை அறிமுகப்படுத்தியது. புதிய தலைமுறை கூப்பர் S மற்றும் கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் கார்களின் விலை முறையே ரூ. 44.9 லட்சம் மற்றும் ரூ. 54.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
புதிய கூப்பர் S திருத்தப்பட்ட லூக் மற்றும் அம்சங்களைப் பெறுகிறது, மேலும் க்ளாசிக் மற்றும் ஃபேவர்டு பேக்குகளில் கிடைக்கிறது, இவற்றின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- டிஜிட்டல் ஓஎல்இடி டச்ஸ்கிரீன்
- மினி 9 ஓஎஸ்
- மினி இண்டெலிஜெண்ட் பர்சனல் அசிஸ்ட்
- டிஜிட்டல் கீ ப்ளஸ்
- ஃபிஷ் ஐ கேமரா
இந்த இந்தியா-ஸ்பெக் மாடல் கடந்த ஆண்டு செப்டம்பரில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2.0-லிட்டர் ஃபோர் சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினிலிருந்து பவரை பெறுகிறது, இது 201bhp பவர் மற்றும் 300Nm டோர்க்கை உருவாக்குகிறது. உலகளவில் 'கூப்பர் E' மற்றும் 'கூப்பர் SE' வேரியன்ட்ஸில் கிடைக்கும் கூப்பரின் ப்யூர் எலக்ட்ரிக் வெர்ஷன் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இந்த புதிய மினி மாடல்களில், கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் முதன்முறையாக இந்தியாவுக்கு வருகிறது. இது பிஎம்டபிள்யூ iX1 உடன் அதன் அடித்தளத்தைப் பகிர்ந்து கொள்கிறது மற்றும் 66.45kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. டிசி சார்ஜிங்கைப் பயன்படுத்தி 29 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும் மற்றும் WLTP சான்றளிக்கப்பட்ட 462 கிமீ டிரைவிங் ரேஞ்சை கொண்டுள்ளது. இது 201bhp மற்றும் 250Nm டோர்க்கையும் உருவாக்குகிறது, இதன் காரணமாக இது 0-100 கிமீ வேகத்தை 8.6 வினாடிகளில் எட்டும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்