- இது எக்சைட் வேரியன்ட்டிற்கு கீழே உள்ள மாடல்
- 461 கிமீ ரெஞ்ச் தூரம் வரை செல்லும்
எம்ஜி மோட்டார் இந்தியா இந்த ஆண்டு தனது நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது மற்றும் அதன் வரம்பில் உள்ள அனைத்து மாடல்களின் விலைகளையும் மாற்றியது. கார் தயாரிப்பாளர் ZS இவியின் என்ட்ரி-லெவல் எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டை ரூ. 18.98 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) லான்ச் செய்தது. இந்த புதிய மாடல் அதன் முந்தைய என்ட்ரி லெவல் எக்சைட் வேரியன்ட்டுடன் ஒப்பிடும்போது ரூ. 1 லட்சம் வரை மலிவானது.
ZS இவி எக்ஸிகியூட்டிவின் பேட்டரி மற்றும் இன்ஜினில் எம்ஜி எந்த மாற்றமும் செய்யவில்லை. இது 50.3kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது 173bhp மற்றும் 280Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. பேட்டரியை 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 60 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும் மற்றும் ஏஆர்ஏஐ-சான்றளிக்கப்பட்ட முழு சார்ஜில் 461 கிமீ ரேஞ்சை வழங்குகிறது.
மற்ற செய்திகளைப் பற்றி பேசுகையில், கார் தயாரிப்பாளர் காமெட் இவி’யின் விலையை மாற்றியுள்ளார். என்ட்ரி லெவல் பேஸ் வேரியன்ட்டின் விலை ரூ. 1 லட்சம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ப்ளே மற்றும் ப்ளஷ் வேரியன்ட்டின் விலை ரூ. 1.40 லட்சமாக குறைந்துள்ளது.