- இந்தியாவில் ZS இவியின் விலை ரூ.23.38 லட்சத்தில் தொடங்குகிறது
- இது நான்கு வண்ண விருப்பங்கள் மற்றும் இரண்டு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ZS இவியின் 10,000 யூனிட்ஸை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் நான்கு வண்ண விருப்பங்களுடன் இரண்டு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.23.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
எம்ஜி ZS இவி ஆனது எக்சைட் மற்றும் எக்ஸ்க்லூசிவ் என இரண்டு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. க்லேஸ் ரெட், அரோரா சில்வர், ஸ்டார்ரி பிளாக் மற்றும் கேண்டி ஒயிட் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் வாடிக்கையாளர்கள் இதை வாங்கலாம். இந்த மாடலில் 50.3kWh பேட்டரி பேக் உள்ளது, இது 174bhp மற்றும் 280Nm டோர்க்கை உருவாக்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 419 கிமீ ரேஞ்ச்யை கொடுக்கும்.
எம்ஜி ZS இவியில் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ், ரூஃப் ரெயில்ஸ், 17 இன்ச் அலோய் வீல்ஸ், பனோரமிக் சன்ரூஃப், டிரைவ் மோட்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்ஸ், டீபிஎம்எஸ் மற்றும் ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் கார் டெக்னாலஜி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்