- விண்ட்சர் செப்டம்பர் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
- எம்ஜியிலிருந்து இந்தியாவுக்கு வரும் மூன்றாவது எலக்ட்ரிக் கார் இதுவாகும்
எம்ஜி விண்ட்சரின் புதிய அம்சம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, விண்ட்சர் பனோரமிக் சன்ரூஃப் உடன் வெளியிடப்படும் என்பதை டீஸர் வெளியீட்டில் ஆட்டோமேக்கர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், எம்ஜியின் மூன்றாவது இவி செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம். எம்ஜி நிறுவனம் இந்த சன்ரூப்பை 'இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் ரூஃப்' என்று அழைக்கிறது, மேலும் அதன் மற்ற மாடல்களில் வழங்கப்படும் சன்ரூஃப்களை எம்ஜி எப்படி அழைக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த மாடலில் வழங்கப்படும் சன்ரூஃப் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகும் மேலும் இது பல்வேறு மொழிகளில் இயங்கக்கூடிய வாய்ஸ் அசிஸ்ட் அம்சமும் உள்ளது.
டீசரில் பார்த்தது போல், எம்ஜி வின்ட்சரிலும் ரியர் சீட் பேக்கேஜை வழங்கும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம், மேலும் இது 135 டிகிரி ரிக்லைன் அம்சமும் வழங்கும் செக்மெண்ட்டில் இந்த அம்சம் முதன்மையானது. மேலும், இதன் ரியர் சீட்ஸில் ஏசி வென்ட்ஸ், சார்ஜிங் போர்ட்ஸ் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவற்றை வழங்கலாம்.
விண்ட்சர் இந்தியாவில் எம்ஜியின் மூன்றாவது இவி ஆகும், அதன் வரிசையில் காமெட் மற்றும் ZS இவிக்கு இடையில் இருக்கும், இதில் பிந்தையது (ZS இவி) 2025 இல் அப்டேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எம்ஜி இந்த உத்தியைப் பின்பற்றி அதன் ஒரே செக்மெண்ட்டில் அதிக எண்ணிக்கையிலான வெவ்வேறு மாடல்களை உற்பத்தி செய்கிறது. இப்போது எம்ஜியின் வரிசையில் ஆஸ்டர், ZS இவி, ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் போன்ற கார்கள் உள்ளன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்