- இது செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- நாட்டில் எம்ஜியின் மூன்றாவது இவி கார் இதுவாகும்
எம்ஜி இந்தியா தனது மூன்றாவது இவியை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சமீபத்தில் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை செப்டம்பர் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. மேலும், பிராண்ட் முதன்முறையாக அதன் ரியர் சீட்ஸை வெளிப்படுத்தியுள்ளது. இந்த காரின் கேபினில் பிளாக் மற்றும் பெய்ஜ் வண்ணங்களின் காணப்படுகிறது. குயில்ட் ரியர் சீட்ஸும் இதனுடன் கிடைக்கும்.
இது தவிர, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ரியர் சீட் 135 டிகிரி ரிக்லைன் ஆங்கிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதன் காரணமாக சீட்ஸ் மிகவும் நீளமாக இருக்கும். அதே நேரத்தில், இந்த காரின் கேபினில் ரியர் ஏசி வென்ட்ஸ், சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட், கதவுகளில் பாட்டில்-ஹோல்டர்கள் போன்ற பல அம்சங்கள் வழங்கப்படும் என்பதையும் படங்களில் தெளிவாகக் காணலாம். இந்த மாடலில் ஏரோ லவுஞ்ச் சீட்ஸ் அதாவது பிசினஸ் கிளாஸ் விமானம் சீட்ஸ் போன்ற ஒரு பேக்கேஜை எம்ஜி வழங்கியுள்ளது.
விண்ட்சரின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் பல அம்சங்களை கிளவுட் இவியிலிருந்து எடுக்கலாம். இந்த எலக்ட்ரிக் காரில் டூயல்-டிஜிட்டல் டிஸ்ப்ளே, லெவல்-2 ஏடாஸ், 360 டிகிரி கேமரா, கனெக்டெட் கார் டெக்னாலஜி மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிராண்ட் வின்ட்சர் இவியை காமெட் மற்றும் ZS இவிக்கு இடையே நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், விலை அடிப்படையில், இந்த எலக்ட்ரிக் கார் க்ரெட்டா, செல்டோஸ் மற்றும் ஆஸ்டர், டாடாவின் நெக்ஸான் இவி மற்றும் மஹிந்திரா XUV400 ஆகியவற்றுடன் போட்டியிட முடியும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்