- இந்தியாவிற்கான எம்ஜியின் மூன்றாவது இவி ஆகும்
- அக்டோபர் 3 முதல் இதன் புக்கிங் தொடங்கும்
எம்ஜி விண்ட்சர் இவியை இந்தியாவில் ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்று வேரியன்ட்ஸ், நான்கு வண்ண விருப்பங்கள் மற்றும் மூணு இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது இந்தியாவிற்கான எம்ஜி’யின் மூன்றாவது இவி ஆகும். எம்ஜி ஒரு சுவாரசியமான விஷ்யத்தை இதில் செய்துள்ளது என்னவென்றால் இனி பேட்டரியையும் வாடகைக்கு எடுக்கலாம். மேலும் மற்றொரு விஷ்யம் என்னவென்றால் ஒரு கிலோமீட்டர்க்கு வெறும் ரூ. 3.50 மட்டுமே செலவாகும்.
எக்ஸ்டீரியர் சிறப்பம்சங்கள்
விண்ட்சரின் வெளிப்புறத்தில், சிக்னேச்சர் கவுல் மற்றும் ஹெட்லேம்ப்ஸ் போன்ற டிசைனைப் பெறுகிறது, அதே சமயம் காரின் சைடில் 18-இன்ச் குரோம் அலோய் வீல்ஸ், ஃபிலோட்டிங்க் ரூஃப்லைன் மற்றும் பாப்-அவுட் டோர் ஹேண்டல்ஸ் உள்ளன. மேலும் அதன் பின்புறத்தில், கனெக்டெட் டெயில்-லேம்ப்ஸ் மற்றும் கிளாஸ் ஹவுஸின் கீழே குரோம் அலங்காரம் ஆகியவற்றைக் காணலாம்.
இன்டீரியர் சிறப்பம்சங்கள்
உள்ளே, எம்ஜி கேபினைக் பெய்ஜ் மற்றும் பிளாக் நிறத்தில் குயில்ட் பேட்டர்ன் சீட்ஸைப் பெறுகிறது. முன்பக்கத்தின் சிறப்பம்சமாக 15.6-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் காமெட்டில் நீங்கள் பெறும் அதே ஓஎஸ் (OS) ஐ தான் விண்ட்சாரும் பெறும். இரண்டாவது வரிசைக்குச் 135 டிகிரி வரை எலக்ட்ரிகள்ளி ரிக்லைன் செய்யக்கூடியது, இது ஒரு பிசினஸ் கிளாஸ் அனுபவமாக இருக்கும் என்று எம்ஜி கூறியது. மேலும் இதில், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்ஸ், ரியர் ஏசி வென்ட்ஸ் மற்றும் சென்டர் கப் ஹோல்டர்களுடன் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றையும் பெறுவீர்கள்.
அம்சங்களின் பட்டியல்
புகைப்படங்களில் நீங்கள் காணக்கூடிய இந்த டாப்-ஸ்பெக் வேரியன்ட் விண்ட்சரில், வயர்லெஸ் ஃபோன் மிரரிங், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ரியர் ஏசி வென்ட்ஸுடன் கூடிய க்ளைமேட் கன்ட்ரோல், கனெக்டெட் கார் டெக்னாலஜி, ரிக்லைனிங் ரியர் சீட், 6 மொழிகளில் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் உடன் கூடிய பனோரமிக் சன்ரூஃப், ஜியோ ஆப்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி, டீபிஎம்எஸ் (TPMS), ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ஃபுல் எல்இடி லைட் பேக்கேஜ் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
இன்ஜின் விருப்பங்கள்
எம்ஜி விண்ட்சர் இவி’யில் 38kWh என்ற ஒற்றை பேட்டரி பேக் விருபத்தில் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டாருடன் வழங்கப்படுகிறது. இது 134bhp மற்றும் 200Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 331 கிமீ வரை செல்லக்கூடியா டிரைவிங் ரேஞ்சை பெறுகிறது. மேலும் இதில் 604 லிட்டர் பூட்ஸ்பேஸும் இதில் உள்ளது.
விண்ட்சரின் பிரீமியம் டிசைன், அம்சங்கள் மற்றும் பட்ஜெட் விலை ஆகியவை எம்ஜியின் இவி போர்ட்ஃபோலியோவிற்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.