- மூன்று வேரியன்ட்ஸ் மற்றும் நான்கு வண்ணங்களில் கிடைக்கும்
- 38kWh பேட்டரி பேக் உடன் 331கிமீ டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது
ஜெஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் விண்ட்சர் இவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. நேரடி கொள்முதல் மற்றும் BaaS திட்டங்களுடன் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 13.5 லட்சம் மற்றும் ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல். BaaS திட்டத்தை நாங்கள் விவரித்துள்ளோம், அதைப் பற்றி எங்கள் வெப்சைட்டில் நீங்க படிக்கலாம்.
கார் தயாரிப்பாளர் விண்ட்சரின் முன்பதிவுகளை அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்யது, இப்போது இந்த மாடல் 24 மணி நேரத்திற்குள் 15,176 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், சியுவியின் டெலிவரிகள் அக்டோபர் 12, 2024 முதல் தொடங்கும்.
புதிய எம்ஜி விண்ட்சர் இவியில் 38kWh பேட்டரி பேக் உள்ளது, இது ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 331கிமீ டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது. இந்த மாடல் 134bhp மற்றும் 200Nm பவரை வெளியிடுகிறது.
2024 விண்ட்சர் இவி எக்சைட், எக்ஸ்க்லூசிவ் மற்றும் ஏசன்ஸ் என மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கின்றன. மேலும், வாடிக்கையாளர்கள் ஸ்டார்பர்ஸ்ட் பிளாக், பேர்ல் ஒயிட், க்ளே பெய்ஜ் மற்றும் டர்க்கைஸ் கிரீன் ஆகிய நான்கு வண்ணங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்