- செக்மெண்ட்-ஃபர்ஸ்ட் 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கிடைக்கும்
- இது BYD e6 போன்ற எலக்ட்ரிக் எம்பீவிகளுடன் போட்டியிடுகிறது
எம்ஜி மோட்டார் இந்தியா தனது புதிய அல்-எலக்ட்ரிக் எம்பீவியான எம்ஜி விண்ட்சர் இவிக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் கார் செப்டம்பர் 11 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்ஸ் அதன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
விண்ட்சர் இவி என்பது உண்மையில் வுலிங்க் கிளவுட் இவியின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாகும். டிசைனைப் பொறுத்தவரை, இது எம்பீவி மற்றும் ஹேட்ச்பேகின் ஒரு புதிய கலவையாகத் தெரிகிறது, ஆனால் எம்ஜி இதை 'சியுவி' என்று அழைக்கிறது, அதாவது கிராஸ்ஓவர் யுடிலிட்டி வேஹிகள். இதன் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் அகலமான லைட் பார்ஸ், செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஃப்ரண்ட் ஃபெண்டரில் பொருத்தப்பட்ட சார்ஜிங் போர்ட், அலோய் வீல்ஸ், இன்டெக்ரேட்டட் ரியர் ஸ்பாய்லர் மற்றும் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டல்ஸ் போன்ற அம்சங்களைப் பெறும்.
இன்டீரியரைப் பற்றி பேசுகையில், விண்ட்சர் இவி ஆனது பிரிமியம் அம்சங்களுடன் வருகிறது, முதலாவது 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப். இது தவிர, இது விமானத்தில் பயன்படுகின்ற ரியர் சீட்ஸையும் கொண்டிருக்கும், இது ரிக்லைன் ஃபங்ஷனுடன் வரும்.
சர்வதேச அளவில், விண்ட்சர் இவி ஆனது 37.9kWh மற்றும் 506kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது, அதிகபட்சமாக 460 கி.மீ ஓட்டும் திறன் கொண்டது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது, எம்ஜி விண்ட்சர் இவி ஆனது பிஒய்டி e6 போன்ற எலக்ட்ரிக் எம்பீவிகளுடன் போட்டியிடும்.
எம்ஜியின் இந்த புதிய எலக்ட்ரிக் கார் குறித்து ஆட்டோமொபைல் சந்தையில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த கார் வாடிக்கையாளர்களை எந்த அளவுக்கு ஈர்க்க முடியும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்