- இந்த சியுவி ஆனது பிஒய்டி e6 உடன் போட்டியிடும்
- இது இந்தியாவில் எம்ஜியின் மூன்றாவது எலக்ட்ரிக் கார் ஆகும்
இந்தியாவில் புதிய விண்ட்சர் இவியின் விலை செப்டம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எம்ஜி மோட்டார் ஜெஎஸ்டபிள்யூ இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. வுலிங்க் கிளவுட் இவியின் ரீபேட்ஜ் மாடலாக பிரபலமடைந்த இந்த எலக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸின் மூன்றாவது எலக்ட்ரிக் கார் ஆகும்.
2024 விண்ட்சர் இவியின் பழைய டீசர்களைப் பார்க்கும்போது, பல அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்டீரியர் சிறப்பம்சங்கள், ஃப்ரண்ட் மற்றும் ரியர் எல்இடி டெயில்லைட்ஸ், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸுடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட ஹெட்லேம்ப் க்ளஸ்டர், இடது ஃப்ரண்ட் ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட், சங்கி அலோய் வீல்ஸ், இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர் மற்றும் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டல்ஸ் ஆகியவை அடங்கும்.
இன்டீரியரைப் பொறுத்தவரை, எம்ஜி மோட்டார்ஸ் டூ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், பனோரமிக் சன்ரூஃப், 135 டிகிரி ரிக்லைன் ஃபங்ஷன் ரியர் சீட்ஸ், ஏரோ-லவுஞ்ச் சீட்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற அம்சங்களை வழங்கும்.
உலகளவில், எம்ஜி விண்ட்சர் இவி ஆனது 50.6kWh யூனிட் மற்றும் 37.9kWh யூனிட் கொண்ட பேட்டரி பேக்குகளுடன், ஒவ்வொன்றும் ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பேட்டரி பேக்குகளை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே 460 கிமீ மற்றும் 360 கிமீ டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது. இந்தியா-ஸ்பெக் காரும் அதே விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களுடன் வர வாய்ப்புள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதும், விண்ட்சர் இவி பிஒய்டி e6 உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்