- அடுத்த மாதம் அறிமுகமாகும்
- எம்ஜி-ஜெஎஸ்டபிள்யூ கூட்டணியின் முதல் தயாரிப்பு
11 செப்டம்பர், 2024 அன்று எம்ஜி விண்ட்சர் இவியை லான்ச் செய்ய திட்டமிட்டுள்ளது. அடகை தொடர்ந்து எம்ஜி நிறுவனம் விண்ட்சரின் பல டீஸ்ர்களை வெளியிட்டது. சமீபத்தில் வெளியான டீஸ்ரில் புதிய மற்றும் பெரிய 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அது தெளிவாக காட்டியது.
இது செக்மெண்ட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய ஸ்கிரீன் மட்டுமல்ல, இந்தியாவில் விற்கப்படும் எம்ஜி கார்களின் தற்போதைய மாடல்ஸிலும் மிகப்பெரியது. இதை எம்ஜி கிராண்ட்வியூ டிஸ்ப்ளே என்று அழைக்கப்படுகிறது.
விண்ட்சர் இவியின் டீஸர் வீடியோவில், 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், ஃபுல் டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டூ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங், பவர்ட் டெயில்கேட், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற கூடுதல் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது. மேலும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ரியர் சீட் பேக்கேஜ் ஆகியவை வழங்கப்படும்.
உலகளவில், வரவிருக்கும் இந்த BYD e6 போட்டியாளர் 37.9kWh மற்றும் 50.6kWh பேட்டரி பேக்குகள் ஒவ்வொன்றும் ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு முழு சார்ஜில் முறையே 360 கிமீ மற்றும் 460 கிமீ வரை செலக்கூடும் க்ளைம்ட் டிரைவிங் ரேஞ்சை கொண்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்