- விண்ட்சர் இவி 18-இன்ச் வீல்ஸுடன் வருகிறது
- இது எம்ஜி வழங்கும் மூன்றாவது எலக்ட்ரிக் கார் ஆகும்
செப்டம்பர் 11 ஆம் தேதி, எம்ஜி நிறுவனம் விண்ட்சர் இவியைக் கொண்டு வரும், அதற்கு முன், அது அதன் அலோய் வீல்ஸின் டிசைனை வெளியிட்டது. அறிமுகப்படுத்த இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், விண்ட்சர் எம்ஜியின் மூன்றாவது இவி ஆகும். விண்ட்சரில் வழங்கப்படும் டாப்-ஸ்பெக் மாடலில் 18 இன்ச் வீல்ஸுடன் டைமண்ட்-கட் டிசைனுடன் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது, டயர் பரிமாணங்கள் 215/55 R18 உடன் குறிப்பிட்டதாக இருக்கும்.
பிரிட்டிஷ் வாகன உற்பத்தியாளர் இந்தியாவில் அதன் மூன்றாவது இவியின் டீசரை வெளியிட்டது, இதில் காரை பற்றிய சில விவரங்களை வெளிப்படுத்துகிறது. இது ஏரோக்லைடு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எம்ஜி நிறுவனம் முந்தைய டீசர்களில் விண்ட்சரின் ரியர் சீட்ஸின் வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது, இது விமானத்தில் பிசினஸ் க்ளாஸில் வழங்கப்படும் 135 டிகிரி ரிக்லைனிங் சீட்ஸைப் போன்றது. மேலும், மற்றொரு டீசரில், எம்ஜி நிறுவனம் தற்போது தனது கார்களில் வழங்கும் எம்ஜி ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய 15 இன்ச் ஃப்ரீ-ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்னை வெளிப்படுத்தியது.
ஒட்டுமொத்தமாக, விண்ட்சர் இவி ஆனது காமெட் மற்றும் ZS இவிக்கும் இடையில் இருக்கும். சொல்லப்பட்டால், ZS இவி காமெட்டை விட அதிக அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை சுமார் ரூ. 18 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ட்சர் இந்த செக்மெண்ட்டில் இரண்டாவது எம்ஜி காராக, டாடா கர்வ் இவி, மாருதி eVX, ஹூண்டாய் க்ரெட்டா இவி, கியா கேரன்ஸ் இவி மற்றும் ஹோண்டா, மஹிந்திரா மற்றும் டொயோட்டாவின் வரவிருக்கும் மாடல்களுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்