- ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் எம்ஜி பல இவி'ஸை காட்சிப்படுத்தியது
- பிராண்டின் இவி போர்ட்ஃபோலியோவின் மொத்த விற்பனையில் 65-75 சதவீதம் பங்களிக்கும்
எம்ஜி மோட்டார் இந்தியாவில் நிலையான வளர்ச்சிக்கான அதன் செயல்தந்திர ஐந்தாண்டு வணிக வரைபடத்தை அறிவித்துள்ளது. மேலும் பல கொள்கைகளுக்கு மத்தியில், 2028 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் ஐந்து இவி'ஸ் வரை அறிமுகப்படுத்தும் திட்டத்தை கார் தயாரிப்பாளர் வெளிப்படுத்தியுள்ளார். இதைச் செய்ய, கார் தயாரிப்பாளர் அதன் உற்பத்தி திறனை விரிவுபடுத்தி, அதன் குஜராத் ஆலையில் ஒரு புதிய பேட்டரி அசெம்பிளி யூனிட்டில் முதலீடு செய்தனர்.
வாகன உற்பத்தியாளர் தற்போது அதன் இந்திய போர்ட்ஃபோலியோவில் இரண்டு எலக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டுள்ளது, ZS இவி மற்றும் காமெட் இவி. 2020 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் கடந்த ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் பதிப்பையும் பெற்றது. சமீபத்தில், கார் தயாரிப்பாளர் காமெட் இவி, நான்கு சீட்ஸ் கொண்ட மைக்ரோ எலக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் ரூ.7.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தினார்.
இப்போது, பிராண்டின் வணிக வரைபடத்தின்படி, வரும் ஐந்து ஆண்டுகளில் அதிக இவி'ஸ் நாட்டில் அறிமுகமாக உள்ளன. ஒரு செய்திக்குறிப்பில், இந்தியாவில் மொத்த விற்பனை அளவுக்கு இவி போர்ட்ஃபோலியோ 65-75 சதவிகிதம் பங்களிக்கும் என்று கார் தயாரிப்பாளர் கூறினார்.
குறிப்பாக, ஆட்டோ எக்ஸ்போ 2023 இல், சீனாவுக்குச் சொந்தமான பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான எம்ஜி, அதன் உலகளாவிய எலக்ட்ரிக் தயாரிப்புகளான MG5 எஸ்டேட் இவி, MG4 இவி மற்றும் மிஃபா 9 ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியது. இப்போது, இவி பிரிவில் பிராண்டின் இருப்பை மேலும் வலுப்படுத்த இந்த மாடல்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதை நாம் பார்க்கலாம்.
வளர்ச்சித் திட்டம் குறித்து, எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் சாபா கருத்துத் தெரிவிக்கையில், எம்ஜி இந்தியாவின் இந்தியாவிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நமது நெறிமுறைகளில் ஆழமாகப் பதிந்துள்ளது. எங்களின் அடுத்த கட்ட நிலையான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் போது, 2028 ஆம் ஆண்டிற்கான தெளிவான வரைபடத்தையும் தொலைநோக்கையும் நாங்கள் திட்டவரை காட்டியுள்ளோம். எங்களது வளர்ச்சி உத்தியானது லோகலைசேஷனை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்டது, அரசாங்கத்தின் 'மேக் இன் இந்தியா' முயற்சியுடன் மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளது. மார்க்கெட்டின் வளர்ந்து வரும் தேவைகளை தொடர்ந்து, மற்றும் விடாமுயற்சியுடன் பூர்த்தி செய்து'.
மொழிபெயர்த்தவர்: பவித்ரா மதியழகன்