- இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
- குளோஸ்டர் இதில் சேர்க்கப்படவில்லை
எம்ஜி மோட்டார்ஸ் தனது 100 வது ஆண்டை நிறைவு செய்துள்ளது, அதை கொண்டாடும் வகையில் ஹெக்டர், காமெட், ZS இவி மற்றும் ஆஸ்டரின் ஸ்பெஷல் எடிஷன்னை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் 100 இயர் லிமிடெட் எடிஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் இந்த கார்களுக்கு ஒரு ஸ்பெஷல் எவர்க்ரீன் ஷேட் கொடுக்கப்பட்டுள்ளது, இது பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது எம்ஜி ஹெக்டர், ZS இவி, ஆஸ்டர் மற்றும் காமெட் இவி ஆகியவற்றிலும் கிடைக்கிறது.
இந்த கார்ஸில் பிளாக் ரூஃபுடன் முழு பிளாக் தீம், டெயில்கேட்டில் '100-இயர் எடிஷன்' பேட்ஜ் மற்றும் ஃப்ரண்ட் ஹெட்ரெஸ்ட்களில் '100-இயர் எடிஷன்' பூப்பின்னல் மற்றும் ஃபுல் பிளாக் தீம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. லிமிடெட் எடிஷனில் கஸ்டமைசேபிள் விட்ஜெட் வண்ணங்களுடன் 'எவர்க்ரீன்' தீமின் ஹெட் யூனிட்டும் இடம்பெறும்.
இன்ஜின்களில் எந்த மாற்றமும் இல்லை, இந்தக் கட்டுரையை எழுதும் போது, எம்ஜி இந்த லிமிடெட் எடிஷன் எத்தனை யூனிட்களை உற்பத்தி செய்யும் என்பதை வெளியிடவில்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் டீசல் எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்னை எம்ஜி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால், இது குளோஸ்டரைக் காணவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். எம்ஜி ரேஞ்சில் இது இரண்டாவது ஸ்பெஷல் எடிஷனாகும், ஏனெனில் இது ஏற்கனவே ஹெக்டர், குளோஸ்டர் மற்றும் ஆஸ்டர் ஆகியவற்றிற்கான பிளாக்ஸ்டார்ம் பேக்கைக் கொண்டுள்ளது.
ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் முன்னணியில் உள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்பெஷல் எடிஷன் மிகவும் பிரபலமாக உள்ளன. கியா மற்றும் ஹூண்டாய் இரண்டாவது இடத்தில் உள்ளன, சமீபத்தில் மாருதி ஸ்விஃப்ட் அறிமுகத்துடன் பந்தயத்தில் இணைந்தது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்