- எம்ஜி திருவனந்தபுரம் சென்ட்ரலில் ஒரு ஷோரூம் மற்றும் சேவை வசதியை தொடங்கியது
- மாநிலத்தில் தற்போது 19 ஷோரூம் மற்றும் சேவை மையம் உள்ளது
திருவனந்தபுரத்தில் புதிய எம்ஜி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் வசதி
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், திருவனந்தபுரம் சென்ட்ரல் என்று அழைக்கப்படும் திருவனந்தபுரம் நகரில் கார் வாங்குபவர்களுக்கான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நிலையத்தைத் திறந்து வைத்துள்ளது. டீலர்ஷிப்பின் ஷோரூம் மற்றும் வொர்க்ஷாப் 5,500 மற்றும் 25,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது கேரளா மாநிலத்தில் நிறுவனத்தின் 19வது டச் பாயிண்ட் ஆகும், அதே நேரத்தில் நாடு முழுவதும் 157 நகரங்களில் 340+ டச் பாயின்ட்ஸ் உள்ளன.
இந்தியாவில் எம்ஜியின் விற்பனை மற்றும் புதிய முயற்சிகள்
இந்தியாவில் தொடங்கப்பட்டதில் இருந்து, எம்ஜி நாடு முழுவதும் 1.75 லட்சம் யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. மேலும், எம்ஜி 100 நாள் சலுகைகளுடன் வாடிக்கையாளர்க்கு சிறப்பு விலை, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லோயல்டி ஸ்கீம்ஸ், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் சேவை சலுகைகள் போன்ற சேவையே அழிக்கும் என்று எம்ஜி வெளிப்படுத்தியது.
எம்ஜி கார்ஸின் ரேஞ்ச் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள்
இந்த மாத தொடக்கத்தில், எம்ஜி குளோஸ்டர், ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. இந்தியாவில் கார் தயாரிப்பாளரின் தற்போதைய போர்ட்ஃபோலியோவில் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், ஆஸ்டர், ZS இவி, குளோஸ்டர் மற்றும் காமெட் இவி ஆகியவை அடங்கும்.
எம்ஜி செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வ கருத்து
நிகழ்ச்சியில் பேசிய எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கௌரவ் குப்தா, '2023 ஆம் ஆண்டு, வாகனத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு நூற்றாண்டை நினைவுகூரும் ஆண்டு நமக்கு முக்கியமான ஆண்டாக அமைகிறது, எங்கள் நெட்வொர்க்கை வலுப்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. இந்த சில வருடங்கள் எங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை அளித்துள்ளது, மேலும் கேரளாவில் 19 டச் பாயின்ட்களுடன் நாடு முழுவதும் வலுவான விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கை நிறுவியுள்ளோம். கேரளா எஸ்யுவிஸ் மற்றும் இவிகளுக்கான மார்க்கெட் வாய்ப்பை வழங்குகிறது, மேலும் வாடிக்கையாளர்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காமெட் இவி, குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் மற்றும் ZS இவி எக்ஸ்க்லூசிவ் ப்ரோ உள்ளிட்ட அனைத்து தயாரிப்புகளையும் இந்த பிரிவுகளில் அனுபவிக்க முடியும்” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்