- நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
- 461 கிமீ டிரைவிங் ரேஞ்ச்ஜைத் தரும்
எம்ஜி மோட்டார்ஸ் அதன் ZS இவி’யின் புதிய மிட்-ஸ்பெக் எக்ஸ்சைட் ப்ரோ வேரியன்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ. 19.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த புதிய வேரியன்ட்டின் விலை அதன் பேஸ் எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டை விட ரூ. 1 லட்சம் அதிகம் மற்றும் டாப்-ஸ்பெக் எசென்ஸை விட ரூ. 5 லட்சம் குறைவாக உள்ளது.
எம்ஜி ZS இவி, ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் கொண்ட நாட்டின் முதல் எலக்ட்ரிக் கார் என்று நிறுவனம் கூறுகிறது.
எம்ஜி ZS இவி எக்ஸிக்யூடிவ், எக்ஸைட் ப்ரோ, எக்ஸ்க்லூசிவ் ப்ளஸ் மற்றும் எசென்ஸ் என நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இதில் 360 டிகிரி கேமரா, 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் 75க்கும் மேற்பட்ட கனெக்டெட் அம்சங்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, ஆறு ஏர்பேக்குகள், இஎஸ்சி, ஹில் டிசெண்ட் கன்ட்ரோல், லெவல் 2 ஏடாஸ்மற்றும் இபிடிஉடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
ZS இவிஆனது 50.3kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது ஒரு முழு சார்ஜில் 461 கிமீ வரை செல்லும். இது நெக்ஸான் இவி மற்றும் மஹிந்திரா XUV400 உடன் போட்டியிடும்.
ZS இவி’யின் வேரியன்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வேரியன்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
எக்ஸிக்யூடிவ் | ரூ. 18,98,000 |
எக்சைட் ப்ரோ | ரூ. 19,98,000 |
எக்ஸ்க்லூசிவ் ப்ளஸ் | ரூ. 23,98,000 |
எசென்ஸ் | ரூ. 24,98,000 |