- குறிப்பிட்ட காலத்தில் 29,000 யூனிட்ஸ்க்கு மேல் விற்கப்பட்டது
- மார்ச் 2023 இல் 6,051 யூனிட்ஸை ரீட்டேல் விற்பனை செய்வதன் மூலம் இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனையை பதிவு செய்தது
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 29,000 யூனிட் பஸ்சேன்ஜ்ர்ஸ் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 24,000 யூனிட்ஸுடன் ஒப்பிடும் போது, வாகன உற்பத்தியாளர் ஒரு ஒரு ஆண்டிற்கு 21 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்தது. ஒரு செய்திக்குறிப்பில், 2023 எம்ஜி ஹெக்டர் மற்றும் ZS இவி இந்த எண்ணிக்கையை அடைவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாக பிராண்ட் கூறியது.
மார்ச் மற்றும் ஜூன் 2023 இல் எம்ஜி சேல்ஸ்
இந்த பிராண்ட் மார்ச் 2023 இல் மொத்தம் 6,051 யூனிட்ஸை விற்பனை செய்தது, இது 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிராண்டின் எல்லா நேரத்திலும் மிக அதிகமான விற்பனையைக் குறிக்கிறது. மறுபுறம், நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் 5,125 யூனிட் பஸ்சேன்ஜ்ர் கார்ஸை விற்றது. ஜூன் 2023, இதன் மூலம் ஒரு ஒரு ஆண்டிற்கு 14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
2023 எம்ஜி ZS இவி இந்தியாவின் லான்ச் அப்டேட்
மற்ற செய்திகளில், எம்ஜி சமீபத்தில் நாட்டில் அப்டேடட் ZS இவியை ரூ.27.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் வாகனம் இப்போது லெவல் 2 ஏடாஸ் பாதுகாப்பு தொகுப்புடன் வழங்கப்படுகிறது, இதில் ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ட்ராஃபிக் ஜாம் அசிஸ்ட், ஸ்பீட் அசிஸ்ட் சிஸ்டம் மற்றும் லேன் ஃபங்ஷன்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளது. ZS இவியில் 50.3kWh பேட்டரி பேக் ஆகும், இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியில் 461கி.மீ டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்