- இரண்டு இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது
- இதன் ஆரம்ப விலை 18 லட்சம் ரூபாய்
இந்தியாவில் உள்ள அனைத்து ஹெக்டர் மாடல்ஸின் விலையையும் எம்ஜி மோட்டார் இந்தியா உயர்த்தியுள்ளது. ஹெக்டர் ப்ளஸ் மூன்று வரிசை எஸ்யுவியின் விலை ரூ.61,000 வரை உயர்த்தியது. இதன் மூலம், இந்த மாடலின் விலை இப்போது ரூ.18 லட்சம் முதல் ரூ.23.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் வேரியண்ட்ஸ் மற்றும் விலை
ஹெக்டர் ப்ளஸ் சிக்ஸ் மற்றும் செவன் சீட்டர் விருப்பங்களில் ஸ்மார்ட், ஸ்மார்ட் EX, ஷார்ப் ப்ரோ மற்றும் சேவ்வி ப்ரோ வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. டீசல் வேரியண்ட் பற்றி பேசுகையில், ஸ்மார்ட் ப்ரோ ரூ.59,000 ஆகவும், ஷார்ப் ப்ரோ ரூ.61,000 ஆகவும் விலையை உயர்ந்துள்ளது. அதேசமயம், பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷனில் உள்ள மற்ற அனைத்து வேரியண்ட்ஸின் விலையும் ரூ.30,000 வரை அதிகரித்துள்ளது.
ஹெக்டர் ப்ளஸ் எஸ்யுவி இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்
ஹெக்டர் ப்ளஸ் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய இரண்டு BS6 2.0-கம்ப்ளைண்ட் இன்ஜின் விருப்பங்கலில் பெறுகிறது. இதன் 1.5 லிட்டர் இன்ஜின் 141bhp மற்றும் 250Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. அதேசமயம் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 168bhp மற்றும் 350Nm டோர்க் திறனையும் வெளிப்படுத்தும். இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் யூனிட்டின் விருப்பத்தையும் பெறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்