- ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ வேரியன்ட்ஸில் அறிமுகமானது
- புதிய அம்சங்கள் புதிய வேரியன்ட்ஸில் கிடைக்கின்றன
எம்ஜி மோட்டார் இந்தியா ஹெக்டர் எஸ்யுவியை ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ ஆகிய இரண்டு புதிய வேரியன்ட்ஸில் ரூ. 16 லட்சம் மற்றும் ரூ. 17.30 லட்சம் (இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) விலையில் லான்ச் செய்துள்ளது. இப்போது இந்த விலைகளின்படி, ஹெக்டரின் ஆரம்ப விலை இப்போது ரூ. 16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
ஹெக்டரின் இரண்டு புதிய வேரியன்ட்ஸில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் கொண்ட 14 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் வருகின்றன.
ஷைன் ப்ரோ வேரியன்ட் சிங்கிள்-பேன் சன்ரூஃப் பெறும் போது, செலக்ட் ப்ரோ டிரிம் டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் பெறுகிறது. இது தவிர, எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள், எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் டோர் ஹேண்டல்ஸில் குரோம் ஃபினிஷ் ஆகியவற்றைப் பெறுகிறது.
எம்ஜி ஹெக்டரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் மற்றொன்று 2.0 லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் விருப்பங்கள் உள்ளன.இரண்டு இன்ஜின்களும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகின்றன. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் பெட்ரோல் மோட்டாரில் மட்டுமே வழங்கபடும்.
வெளியீட்டு விழாவில் பேசிய எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கௌரவ் குப்தா, “2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, எம்ஜி ஹெக்டர் எஸ்யுவி பிரிவில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த டிரைவர் வசதி மற்றும் ஏடாஸ்லெவல் 2 போன்ற சிறந்த அம்சங்களுடன், இந்த வாகனம் வருகிறது. எனவே, வாடிக்கையாளர்களின் ஆலோசனைகள் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த புதிய வேரியன்ட்ஸ்ஸை வடிவமைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்