- ரூ. 1.29 லட்சம் வரை விலையில் சரிவு
- ஏழு வேரியண்ட்ஸில் கிடைக்கின்றன
மற்ற கார் உற்பத்தியாளர்களும் தங்கள் வாகனங்களின் விலையை அதிகரித்து வரும் நிலையில், எம்ஜி இந்தியா தனது ஐந்து சீட்டர் கொண்ட எஸ்யுவி ஹெக்டரின் விலையை குறைத்துள்ளது. இது ஸ்டைல், ஸ்மார்ட், ஸ்மார்ட் EX, ஸ்மார்ட் ப்ரோ, ஷார்ப் ப்ரோ மற்றும் சேவ்வி ப்ரோ என ஏழு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. ஹெக்டரின் விலையில் அதிகபட்சமாக ரூ. 1,29,000 குறைந்துள்ளது.
எம்ஜி ஹெக்டரின் வேரியண்ட் வாரியான குறைக்கப்பட்ட விலை:
வேரியண்ட்ஸ் | விலை குறைவு | புதிய எக்ஸ்-ஷோரூம் விலை |
ஸ்டைல் 1.5 டர்போ மேனுவல் | ரூ. 27,000 | ரூ. 14,72,800 |
ஷைன் 1.5 டர்போ மேனுவல் | ரூ. 35,000 | ரூ. 15,98,800 |
ஸ்மார்ட் 1.5 டர்போ மேனுவல் | ரூ. 36,000 | ரூ. 16,79,800 |
ஷைன் 1.5 டர்போ சிவிடீ | ரூ. 35,000 | ரூ. 17,18,800 |
ஸ்மார்ட் 1.5 டர்போ சிவிடீ | ரூ. 36,000 | ரூ. 17,98,800 |
ஸ்மார்ட் ப்ரோ 1.5 டர்போ மேனுவல் | ரூ. 66,000 | ரூ. 17,98,800 |
ஷார்ப் ப்ரோ 1.5 டர்போ மேனுவல் | ரூ. 66,000 | ரூ. 19,44,800 |
ஷார்ப் ப்ரோ 1.5 டர்போ மேனுவல் டூயல்-டோன் | ரூ. 66,000 | ரூ. 19,64,800 |
ஷார்ப் ப்ரோ 1.5 டர்போ சிவிடீ | ரூ. 66,000 | ரூ. 20,77,800 |
ஷார்ப் ப்ரோ 1.5 டர்போ சிவிடீ டூயல்-டோன் | ரூ. 66,000 | ரூ. 20,97,800 |
சேவ்வி ப்ரோ 1.5 டர்போ சிவிடீ | ரூ. 66,000 | ரூ. 21,72,800 |
சேவ்வி ப்ரோ 1.5 டர்போ சிவிடீ டூயல்-டோன் | ரூ. 66,000 | ரூ. 21,92,800 |
ஷைன் 2.0 டர்போ டீசல் மேனுவல் | ரூ. 86,000 | ரூ. 17,98,800 |
ஸ்மார்ட் 2.0 டர்போ டீசல் மேனுவல் | ரூ. 94,000 | ரூ. 18,99,800 |
ஸ்மார்ட் ப்ரோ 2.0 டர்போ டீசல் மேனுவல் | ரூ. 1,29,000 | ரூ. 19,98,800 |
ஸ்மார்ட் ப்ரோ 2.0 டர்போ டீசல் மேனுவல் டூயல்-டோன் | ரூ. 1,29,000 | ரூ. 20,19,800 |
ஷார்ப் ப்ரோ 2.0 டர்போ டீசல் மேனுவல் | ரூ. 1,21,000 | ரூ. 21,50,800 |
ஷார்ப் ப்ரோ 2.0 டர்போ டீசல் மேனுவல் டூயல்-டோன் | ரூ. 1,21,000 | ரூ. 21,70,800 |
2023 எம்ஜி ஹெக்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0-லிட்டர் டீசல் இன்ஜின் விருபங்களில் வாடிக்கையாளர் இதை பெறலாம். இதன் பெட்ரோல் வேரியண்ட் 141bhp மற்றும் 250Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது, அதே சமையம் டீசல் இன்ஜின் 168bhp மற்றும் 350Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் சிவிடீ உடன் வாங்க முடியும், அதே சிவிடீ ஆனது டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டுமே கிடைக்கின்றன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்