- ரூ. 21.25 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது
- ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் 5, 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷனில் வழங்கப்படுகிறது
எம்ஜி மோட்டார் இந்தியா ஹெக்டரின் டார்க் எடிஷன் வெர்ஷனான ‘பிளாக்ஸ்டோர்ம்’ என்ற பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது 5, 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷனில் ரூ. 21.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை. எம்ஜி நிறுவனம் இதனை அறிமுக விலையுடன் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த விலை முதல் 250 யூனிட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இப்போது, அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்ஸ்க்கு வரத் தொடங்கியுள்ளது.
பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் முதலில் குளோஸ்டர் எஸ்யுவி மற்றும் பின்னர் ஆஸ்டரில் காணப்பட்டது. இதில் பம்பர்கள், ஓஆர்விஎம்கள் மற்றும் பிரேக் காலிப்பர்களில் ரெட் நிற அக்ஸ்ன்ட்ஸில் ஃபுல் பிளாக் ஸ்கீமீல் பெறுகிறது. மேலும், இதில் ஒரு டார்க் குரோம் ஃப்ரண்ட் கிரில், கருப்பு ஹெட்லேம்ப் பெசல்கள், பிளேட் ஃபினிஷ், ஸ்மோக்டு டெயில்லைட் மற்றும் ‘பிளாக்ஸ்டோர்ம்’ பேட்ஜ் ஆகியவற்றைப் பெறுகிறது.
காரின் கேபினுக்குள் பார்க்கும்போது, இந்த எஸ்யுவி ஆனது பிளாக்-அவுட் தீம் மற்றும் ரெட் அக்ஸ்ன்ட்ஸ் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, ஹெக்டரில் ஒரு பெரிய போர்ட்ரெய்ட்-ஸ்டைல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, 6 ஏர்பேக்குகள், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் லெவல்-2 ஏடாஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. முதல் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ கியர்பாக்ஸுடன் 141bhp மற்றும் 250Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இன்ஜின் டீசல் மில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவலுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இது 168bhp மற்றும் 350Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்